dc.contributor.author |
மொஹம்மது அர்ஷத், மொஹம்மது யாஸீம் |
|
dc.date.accessioned |
2024-09-12T09:08:08Z |
|
dc.date.available |
2024-09-12T09:08:08Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1339 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15730 |
|
dc.description.abstract |
பாடசாலைகளின் முகாமைத்துவத்தை வினைத்திறனாக மேற்கொள்ள நிறுவனத் தத்துவங்களின் தேவைப்பாடு மிகவும் அவசியம். இருப்பினும் இன்றைய பாடசாலைகளில் அவை உணரப்படாத நிலையில் உள்ளது. இதனடிப்படையில் பாடசாலைகளில் முகாமைத்துவத்தை வினைத்திறனாக்க தற்போது நடைமுறையில் உள்ள செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை மேலும் சிறப்பாக்க ஹென்றி பயோலின் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத் தத்துவங்களினை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதனை நோக்காகக் கொண்டு இவ்வாய்வு இடம் பெறவுள்ளது. இதற்காக ஹொரவ்பொதான கோட்டத்திலுள்ள 12 தமிழ் மொழி மூல பாடசாலைகளிலிருந்து ஒதுக்கீட்டு மாதிரித் தெரிவு மூலம் 50% ஆன 06 பாடசாலைகள் இவ்வாய்வுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்ட 6 பாடசாலைகளில் உள்ள 6 அதிபர்களும் 46 பாடசாலை முகாமைத்துவ குழு உறுப்பினர்களும் 44 மாணவத் தலைவர்களும் நோக்க மாதிரி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் 119 ஆசிரியர்கள் ஆண் பெண் என படையாக்கம் செய்யப்பட்டு பின் இலகு எழுமாற்று மாதிரி மூலம் 4:1 என்ற வகையில் 30 ஆசிரியர்களும், 69 பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் படையாக்கப்பட்டு பின் நோக்க மாதிரி மூலம் வலயப் பிரதிநிதியும் ஏனையோர் இலகு எழுமாற்று மாதிரி அடிப்படையில் மொத்தமாக 19 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்விற்காக தரவு சேகரித்தல் கருவிகளாக ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு வினாக்கொத்தும் பாடசாலை முகாமைத்துவ குழு மற்றும் மாணவத் தலைவர்களுக்கு கலந்துரையாடலும் அதிபர்களுக்கு நேர்காணலும் பயன்படுத்தப்பட்டன. சிறப்பு நோக்கங்களை மையமாகக் கொண்டு பெறப்பட்ட அளவு மற்றும் பண்புரீதியான தகவல்கள் Microsoft Exel மூலம் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு வியாக்கியானம் கலந்துரையாடல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வின் முடிவுகளாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் முகாமைத்துவம் பூரண வினைத்திற்றதாக இருப்பது கண்டறியப்பட்டதோடு ஹென்றி பயோலின் தெரிவு செய்யப்பட்ட நிறுவனத் தத்துவங்களின் முக்கியத்துவங்கள் பெறுமதியுடையவை உணரப்பட்டு நடைமுறைப்படுத்துவதிலுள்ள பிரச்சினைகள் பாடசாலை மேம்பாட்டை உருவாக்க தடங்கலாக உள்ளமை உறுதி செய்யப்பட்டதோடு அவற்றை கடந்து
செயற்படுத்துவதற்கான ஆலோசனைகளை முன்னெடுக்கக்கூடிய வகையில் விதப்புரைகள்
முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
முகாமைத்துவம் |
en_US |
dc.subject |
நிறுவனத் தத்துவம் |
en_US |
dc.subject |
வினைத்திறன் |
en_US |
dc.subject |
பாடசாலை முகாமைத்துவம் |
en_US |
dc.title |
வினைத்திறனான பாடசாலை முகாமைத்துவத்தில் ஹென்றி பயோலின் நிறுவனத் தத்துவங்களின் செல்வாக்கு |
en_US |
dc.type |
Thesis |
en_US |