dc.description.abstract |
தொழிற் சந்தைக்கு தேவையான மாணவர்களை தயார்படுத்துவதில் அனுபவக் கல்வி இன்றியமையாத ஒன்றாகும். அனுபவக் கல்வியின் அனைத்து கூறுகளும் உட்பொதிந்ததாக கோஹ்லரின் அகக்காட்சி கற்றல் கொள்கையானது காணப்படுவதனால் கட்டிளமைப்பருவ மாணவர்களுக்கான விஞ்ஞான பாட கற்பித்தலில் இக்கொள்கையை பிரயோகிப்பதில் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, விஞ்ஞான பாடத்தினை அகக்காட்சி முறையில் கற்பிப்பதற்கான வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் முன்வைப்பதை இவ் அளவை நிலை ஆய்வு நோக்கமாக கொண்டுள்ளது. இதன்படி அனுராதபுர மாவட்ட, கலன்பிந்துனுவெவ கல்வி வலய, கஹடகஸ்திகிலிய கல்வி கோட்டத்தில் உள்ள தமிழ் மொழி பாடசாலைகளின் கட்டிளமைப்பருவ மாணவர்களை உள்ளடக்கியதாக 05 பாடசாலைகள் உள்ளன. அந்த 05 பாடசாலைகளும், அவற்றின் அதிபர்கள் 05 பேரும், விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் 14 பேரும், விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் ஒருவரும் நோக்க மாதிரியின் அடிப்படையில் இவ் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்டனர். மற்றும் பாடசாலையில் தரம் 10, 11 இல் கல்வி கற்கும் மாணவர்களை ஆண், பெண் என படையாக்கம் செய்து, அதிலிருந்து 4.1 எனும் விகிதத்தில் 99 பேர் இலகு எழுமாற்று மாதிரியின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். ஆய்வுக்கான தரவு சேகரித்தல் கருவிகளாக வினாக்கொத்து, நேர்காணல், அவதானம், ஆவணம் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக் கருவிகளின் துணையுடன் பெறப்பட்ட தரவுகளும், தகவல்களும் அளவு ரீதியாகவும், பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு Microsoft Excel ஐப் பயன்படுத்தி சலாகை வரைபுகள், கோட்டு வரைபுகள் மூலமாக எடுத்துக் காட்டப்பட்டு, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு முடிவுகளும் பெறப்பட்டன. அந்த முடிவுகளுல் விஞ்ஞான பாட கற்பித்தலில் ஆசிரியர்கள் அகக்காட்சி கொள்கையினை பிரயோகிக்கும் போது எழும் சவால்களுள் கலைத்திட்டம் மாணவர்களின் அனுபவத்திற்கு ஏற்ப விருத்தியடையாமை, அரசு வளப்பகிர்வில் சமநிலை தன்மையை சகல மாவட்டங்களுக்கும் பேணாமை, மாணவர்கள் மனழுெச்சி சிக்கல் தன்மைக்கு உட்படுகின்றமை போன்ற பல சவால்கள் தரவுகளில் இருந்து கண்டறியப்பட்டன. எனவே இவற்றினை குறைப்பதற்கு கலைத்திட்டம் மாணவர்களின் அகக்காட்சி கற்றலுக்கு ஏற்ப விருத்தியடைதல், அரசு நாட்டின் சகல பாடசாலைக்கும் சமமாக வள பகிர்வை மேற்கொள்ளுதல், மாணவர்களின் மனவெழுச்சி பிரச்சினைகளை கற்றலுக்கு ஏற்புடையதாக மாற்றுதல் என பல விதப்புரைகளும் இவ் ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |