dc.description.abstract |
க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களிடையே தற்காலத்திற்குத் தேவையான திறன்களை விருத்தி செய்வதற்காக வாழ்க்கைத் தகைமை விருத்திச் செயற்றிட்டம் கொண்டுவரப்பட்ட போதிலும் அதில் மாணவர்களை ஆர்வத்துடன் பங்கு கொள்ளச் செய்வது பாடசாலைகளின் பொறுப்பாக உள்ளது. இருப்பினும் பாடசாலைகளில் இதனை மேற்கொள்வதில் மாணவர்களின் ஆர்வமானது எவ்வாறான நிலையில் உள்ளது என்பது கேள்விக் குறியாகவுள்ளது. எனவே இச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பதில் மாணவர்களின் ஆர்வநிலையைக் கண்டறியும் நோக்கில் இவ்வாய்வானது இடம்பெற்றுள்ளது. இதற்காக கல்குடா கல்வி வலயத்தின் கோறளைப்பற்றுக் கோட்டப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது. மாதிரிகளாக நோக்க மாதிரியின் அடிப்படையில் கல்குடா கல்வி வலயயத்திலுள்ள பாடசாலைகளில் க.பொ.த உயர்தரம் உள்ள 8 பாடசாலைகளும் அவற்றின் 8 அதிபர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன் க.பொ.த உயர்தர வகுப்பிற்குக் கற்பிக்கும் 117 ஆசிரியர்கள் ஆண், பெண் எனப் படையாக்கம் செய்யப்பட்டு பின்னர் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் 2:1 எனும் விகிதத்தில் 61 ஆசிரியர்களும் அதே போன்று க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்கள் 880 பேர் கலை, வணிகம், விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் என்னும் துறைகளின் அடிப்படையில் படையாக்கம் செய்யப்பட்டு பின்னர் இலகு எழுமாற்று மாதிரியின் அடிப்படையில 10:1 எனும் விகிதத்தில் 90 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இம் மாதிரிகளிடமிருந்து வினாக்கொத்து, நேர்காணல் என்பவற்றின் மூலம் அளவுரீதியாகவும் பண்புரீதியாகவும் தரவுகள் பெறப்பட்டு Micro soft Excel மூலம் பகுப்பாய்விற்குட்படுத்தப்பட்டு அட்டவணைகள், வரைபுகள் மூலமாக வகை குறித்துக்காட்டப்பட்டு கலந்துரையாடலும் செய்யப்பட்டன. இவ்வாய்வின் முடிவாக வாழ்க்கைத் தகைமை விருத்திச் செயற்றிட்டத்தில் மாணவர்களின் ஊக்கம், ஈடுபாடு, கடின உழைப்பு, செயற்றிறன் என்பன குறைவாகவே உள்ளது எனவும் உயர்தர வகுப்பு மாணவர்கள் பரீட்சைக்குத் தம்மை தயார்படுத்துவதிலேயே முழுமையான கவனத்தைச் செலுத்துகின்றனர் எனவும் கண்டறியப்பட்டது. அத்துடன் வாழ்க்கைத் தகைமை விருத்திச் செயற்றிட்டத்தின் முக்கியத்துவங்களை மாணவர், ஆசிரியர். பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறுதல், பல்கலைக்கழக நுழைவில் இச் செயற்றிட்டத்தின் புள்ளிகளை இணைத்துக் கொள்ளுதல் போன்ற விதப்புரைகளும் முன்மொழியப்பட்டது. |
en_US |