Abstract:
தற்கால உலகில் பெண்களின் உரிமைகள் என்ற எண்ணக்கரு முக்கியத்துவம் பெறுகின்றது. உலகளாவிய ரீதியில் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் காணப்படுகின்றன. அவை பெண்களினுடைய உரிமைகளை பாதுகாப்பதாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் தற்கால உலகில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பாகுபாடுகள் என்பன அதிகம இடம் பெற்றுக்கொண்டு வருகின்றன. இந்த வகையில் பெண்களினுடைய உரிமைகள் என்பது பாதிக்கப்டுகின்றது. சமயங்களில் பெண்களுக்கான உரிமைகள் என்பது வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது. அந்த வகையில் இஸ்லாமிய மதத்தில் பெண்களுக்கான உரிமைகள் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
இஸ்லாம் மதமானது பெண்களை கண்ணியமாக மதிக்கின்றது. பெண்களுக்கான அனைத்து வகையான உரிமைகளையும் இஸ்லாமிய மதம் வழங்குகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்யும் தாலிபான்கள் மூலமாக அங்கு பெண்களினுடைய உரிமைகள் என்பது மீறப்பட்டு வருகின்றது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளும், பாகுபாடுகளும் அதிகம் இடம் பெறுகின்றன. தாலிபான்கள் இஸ்லாமிய மதத்தினை பின்பற்றுவதனால் இஸ்லாமிய அரசியலமைப்பாக காணப்படுகின்றது. முறையை ஆப்கானிஸ்தானில்
அந்தவகையில் இவ்வாய்வானது ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியின் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனை பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு காணப்படுகின்றது. இவ்வாய்வின் நோக்கமாக தாலிபான்கள் ஆட்சி முறையினால் ஆப்கானிஸ்தானில் ஏற்படும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள், பாகுபாடுகள் மற்றும் உரிமை மீறல்கள் எவை என கண்டறிந்து. அதனை இஸ்லாமிய பெண்கள் உரிமை நோக்கில் தாலிபான்களின் பின்பற்றும் சட்டமுறை தொடர்பாக பகுப்பாய்வு செய்வதே ஆய்வின் நோக்கமாக காணப்படுகின்றது. இவ்வாய்வானது பண்புரீதியிலான ஆய்வாகும் இதற்காக இரண்டாம் நிலைத்தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியால் பெண்கள் சிறுமிகளுக்கு எதிரான பாகுபாடுகள் வன்முறைகள் உரிமைமீறல்கள் இடம்பெறுவது வெளிப்படையான உண்மையாகவும், மற்றும் இவர்களின் சில சட்டமுறைகள் இஸ்லாமிய சட்டமுறைக்கு முரணானதாக காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் நல்லாட்சி நிலவுவதற்கு சில பரிந்துரைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.