Abstract:
பல்லின சமூகக்கட்டமைப்பைக் கொண்ட இலங்கையில் தொடரும் வன்முறைகளின் வரிசையில் இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நிறைவேற்றுவதில் பின்னின்று செயற்பட்ட பிரதான சந்தேகநபராக, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் முன்னாள் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமி என்பவரை விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். இத்தாக்குதல்களின் விளைவாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் சமூகத்தை இலக்காகக்கொண்டு வன்முறைச் சம்பவங்களும் பதற்ற நிலையும் ஏற்பட்டன. இப் பயங்கரவாதத் தாக்குதலானது முஸ்லீம்கள் மீதான ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வினை நாடுபூராகவும் கட்டியெழுப்பியமையானது முஸ்லீம் சமூகத்தினரின் மீதான மனித உரிமை மீறல்களையும் ஏற்படுத்தியதுடன் பௌத்த பயங்கரவாத எழுச்சிக்கு அத்திவாரத்தை இட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான சூழலில் இலங்கைவாழ் முஸ்லீம்களுக்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை கண்டறிவதுடன் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் ஏற்படாமல் இருப்பதற்கான வழிவகைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் தற்போது சமூகங்களுக்கிடையே காணப்படும் உளவியல் போர் (Mental War) அரங்கேற்றப்படுவதனை இவ்வாய்வு கண்டறிந்துள்ளது. அத்துடன், அடையாள முஸ்லிம்களிடம் வெளிப்பாடுகள், இஸ்லாமியமயமாக்கம் மற்றும் அதனால் பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சவுணர்வு. வெறுப்புணர்வு, சந்தேகங்கள், மதமேலாதிக்கவாதம் என்பன அவர்களின் உரிமைகளில் பாதிப்பை தூண்டுகின்ற முக்கிய காரணிகளாக அடையாளங்கண்டுள்ளன. எனவே, மனித உரிமை மீறல்களானது தொடரும் பட்சத்தில் அவை நீண்டகால வன்முறைகளுக்கு வழிவிடும் என்பதால் இவ்வாய்வானது நாட்டில் ஜனநாயக தன்மையினை சட்டங்கள் ஊடாக இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாட்டில் சிறுபான்மையினரின் உரிமை மீறல்களை தடுப்பதற்கான வழிவகைகளை இவ்வாய்வானது பரிந்துரைப்பதாக உள்ளது.