dc.description.abstract |
உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்ற பிரதான பிரசச் னையாக வறுமையும், வறுமையினால் இழக்கப்படும் மனித உரிமைகளும் காணப்படுகின்றன. இந்த வகையில் இலங்கையிலும் இதனை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் இப் பிரச்சினைகளை தீர்த்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களாக வறுமை ஒழிப்பு திட்டங்கள், சமூக சேவை மற்றும் சமூக நலன்புரிகள் காணப்படுகின்றன. இத் திட்டங்கள் எல்லாவற்றினதும் நோக்கமே வறுமைக்குட்பட குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக அமைகின்றது. இந்த ஆய்வானது "அடிப்படை தேவைகள், வறுமை, மனித உரிமைகள்: கோறளைப்பற்று பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு" என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வறுமையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்வான நிலைமையில் காணப்படுகிறது. அதேவேளை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள கல்மடு. பேத்தாளை, கும்புறுமுலை கிராமசேவக பிரிவினுள் வறுமை அதிகளவில் காணப்படுகின்றது. இவ்வாய்வானது இப்பிரதேச மக்களின் தற்போதைய வாழ்க்கைத்தர நிலைமையும், வறுமை ஒழிப்ப திட்டங்களையும் மற்றும் சமூக சேவை, சமூக நலன்புரி திட்டங்களின் நிலையினையும், அணுகுமுறைகளையும், இலக்குகளையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வானது அடிப்படை தேவைகள், வறுமை, மனித உரிமைகள் ஆகிய எண்ணக்கருக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குடும்பங்களின் அடிப்படையில் மூன்று கிராமசேவகப் பிரிவுகளில் 50 வினாக்கொத்துகள் மூலமும் நேரடி அவதானம் மூலமும் முதலாம் நிலை தரவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாம் நிலை தரவுகள் பிரதேச செயலக புள்ளிவிவர தரவுகள், பட்டயங்கள், பிரதேச செயலக அறிக்கைகள் மூலமும் சேகரிக்கப்பட்டன. விவரிக்கப்பட்ட தரவுகள் கணினியின் உதவியுடன் வரைபடங்கள். அட்டவணைகள் மூலமும் விளக்கப்பட்டுள்ளன. கண்டுப்பிடிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதில் வறுமை ஒழிப்புத் திட்டம், சமூக சேவை மற்றும் சமூக நலன்புரி திட்டங்களின் சேவைகள் பற்றி நோக்கும் போது, குறைந்தளவிலான பங்களிப்பையே காட்டுகின்றது. இதனால் வறுமை அதிகளவாக நிலவுவதோடு, இதனால் மனித உரிமைகளும் இழக்கப்படுகின்றன. இத் தரவுகளின் அடிப்படையில் அடிப்படைத் தேவைகள், வருமானம், சேமிப்பு, சுயதொழில் ஆகியவற்றின் தரவுகள் அடிப்படையில் பெறப்பட்டது. இங்கு வருமானம் போதாமை, வறுமை ஒழிப்பு திட்டம், சமூக நலன்புரி, சமூக சேவை பற்றிய அறியாமை, அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை, போன்று பல காரணிகள் வறுமைக்கு அடிப்படையாக அமைகின்றன. ஆகவே இவ்வாய்வானது அரசாங்கம், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், நலன்விரும்பிகள், கிராம சேவக உத்தியோகஸ்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் ஆகியோருக்கு இப் பிரதேசத்தின் தற்போதைய நிலை, அடிப்படை தேவைகளை பெற்றுக் கொள்வதிலுள்ள சவால்கள் என்பவற்றை அறிந்து கொள்வதற்கும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறது. |
en_US |