Abstract:
சமகால உலகானது எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக போதைப்பொருள் பாவனையானது காணப்படுகின்றது. போதைப் பொருளானது தனிமனிதனையும் சமூகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்ற அதே நேரம், பல்வேறு வகையான சமூகப் பிரச்சினைகள் தலை தூக்குவதற்கும் காரணமாக அமைகின்றது. அத்தோடு இந்த போதை பொருள் பாவணையானது ஆளுக்குகாள் பரவுகின்ற ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதன்படி போதை பொருள் பாவனையானது தனிமனித நடத்தையில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாகவும், இந்த நடததை வெளிப்பாடுகளானது சமூகப் பிரச்சினைகளுக்கு எவ்வாறு வழிவகுக்கின்றது. அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவைகளை கண்டறியும் நோக்கமாக "சமூக ஒழுக்கச் சீர்குலைவில் போதைப்பொருள் பாவணை ஏற்படுத்தும் தாக்கம் " என்ற தலைப்பில் தெல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவினை மையப்படுத்தியதாக இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்காக பண்புரீதியான முறைமையியலும் மற்றும் எண் கணித ரீதியான முறைமையியலும் பயன்படுத்தப்பட்டது. அத்தோடு முதலாம் நிலைத் தரவுகள், இரண்டாம் நிலை தரவுகளின் உதவியுடன் தரவுப் பகுப்பாய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக போலீஸ் அதிகாரி, வைத்திய அதிகாரி, பிரதேச செயலக போதைப்பொருள் தொடர்பான வெளிக்கள உத்தியோகத்தர், கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் பெறப்பட்டது. இதனோடு 300 குடும்பங்கள் எழுமாற்று மாதிரி எடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டு, அதில் 120 நபர்களிடம் வினாக்கொத்துகள் வழங்கி தேவையான தரவுகளானது பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டே தரவுப் பகுப்பாய்வும் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி தெல்தோட்டை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், கசிப்பு, புகைத்தல் (பீடி சுருட்டு) மது. சாராயம் போன்றவை பாவனையில் உள்ள போதும் ஹெரோயின், கசிப்பு, கள்ளச்சாராயம், கஞ்சா போன்றவைகளானது அதிகளவில் பாவனையில் உள்ள போதைப்பொருள் வகைகளாக காணப்படுகின்றது. இவ்வாறு போதைக்கு அடிமையானவர்கள் வித்தியாசமான நடத்தைகளை வெளிப்படுத்துவார்களாக காணப்படுகின்றார்கள். அதிகப்படியான தூக்கம், வாக்குவாதம், சண்டையிடுதல், அசுத்தமாக இருத்தல், ஞாபகம் மறதி, பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள், வன்முறையில் ஈடுபடுதல், முரட்டுத்தனம் போன்றவைகளானது அவ்வாறான நடத்தை வெளிப்பாடுகளாக காணப்படுகின்றது. இவ்வாறான நடத்தை வெளிப்பாடுகளானது சமூகத்தில் பிரச்சனைகளை உருவாகுவதற்கு காரணமாக அமைகின்றது. அதனால் ஏற்படும் விளைவுகள் யாவை என்பதனை விளக்குவதே இந்த ஆய்வாக காணப்படுகின்றது. இதன்படி வன்முறைகள் அதிகரித்தல், பொதுச்சொத்துக்கள் சேதமாக்குதல்,கலாசார சீரழிவு, சமூக ஒருங்கிணைப்பு சீர்குலைத்தல, சிறுவர் துஷ்பிரயோகம், பொருளாதார பின்னடைவு. களவு, கொலை, பாலியல் துஷ்பிரயோகம் போன்றவைகளானது இவ்வாறான போதை பொருட்களினால் ஏற்படுகின்ற சமூகப்
பிரச்சினைகளாக காணப்படுகின்றது. எனவே இவ்வாறு போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் முகமாக அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு அதற்கு துணையாக இருப்பவர்களுக்கான எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பாதிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்புதல் போன்ற பரிந்துரைகளை முன் வைப்பதாக இந்த ஆய்வானது அமைகின்றது.