dc.description.abstract |
இலங்கை பல்லின மக்களைக் கொண்ட நாடாகும். அதனடிப்படையில் இங்கு காணப்படுகின்ற மக்களில் மலையக தமிழர்கள் 200 வருடங்களிற்கு முன்னர் இந்தியாவிலிருந்து பிரித்தானியர்களால் இலங்கையிற்கு கூலித்தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டனர். எனினும் இந்த மக்கள் தமது வாழ்க்கை முறையை இலங்கைக்கு ஏற்றாற் போல மாற்றிக்கொண்டு தமது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டனர்.அந்த வகையில், இலங்கையில் மலையக தமிழர்கள் தமக்கான தனித்துவமான இனத்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டனர். மலையக தமிழர்கள் தமது மொழி, சமய நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பரியம், வாழ்வியல் போன்ற அம்சங்களை கொண்டு தமது இனத்துவ அடையாளத்தை கட்டியெழுப்பியுள்ளனர்.
எனினும் மலையக மக்கள் இனத்துவ அடிப்படையில் பல சவால்களிற்கு முகம் கொடுக்கின்ற இனமாகும். மேலும் மலையக தமிழ் மக்கள் தன்னுடைய இன அடையாளத்தின் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வகையான உரிமை மீறல்களையும் பாரபட்சமான கொள்கையையும் நாளுக்கு நாள் அனுபவித்து வருகின்றனர். தனித்துவமான பண்பினை கொண்ட மலையக தமிழ் மக்களின் இனத்துவ அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டே என்னுடைய ஆய்வானது அமையப்பெற்றுள்ளது. |
en_US |