dc.description.abstract |
இன்று உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் பிரதிநிதித்துவ ஜனநாயக முறைமையே காணப்படுகிள்றது. ஆரம்ப காலத்தில் குறிப்பாக கிரேக்கத்தில் நேரடி ஜனநாயகம் நடைப்பெற்றது. அங்கு ஆட்சிக்குட்பட்ட அனைத்து மக்களும் ஒன்று கூடி ஆட்சிக் கருமங்கள் பற்றிய தீர்மானங்களை எடுத்தனர். தற்காலத்தில் நாடுகளின் பரந்த நிலப்பரப்பு. சனத்தொகை அதிகரிப்பின் தாக்கம். ஒன்று கூடுவதிலுள்ள சிரமங்கள் போன்ற காரணிகளினால் நேரடி ஜனநாயகமானது பிரதிநிதித்துவ ஜனநாயகமாக மாற்றமடைந்துள்ளது. தாராள ஜனநாயக ஆட்சி முறையின் உயிர்நாடியான பிரதிநிதித்துவ முறையானது இன்று எளிய பெரும்பான்மை முறை, விதாசார பிரதிநிதித்துவ முறை, கலப்பு பிரதிநிதித்துவ முறை. தொழில்வாரியான பிரதிநிதித்துவ முறை போன்ற வடிவங்களில் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இதில் ஜனநாயக விழுமியங்களை பேணிக்காப்பதற்காகவும் சிறுபான்மை மக்களின் அரசியல் பங்குப்பற்றலை உறுதிப்படுத்துவதற்காகவும், எளிய பெரும்பான்மை முறையில் ஏற்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்திப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட தேர்தல் முறையாக விதாசார பிரதிநிதித்துவமுறை காணப்படுகின்றது. சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் வழங்க பலமுறைகள் உள்ளன. முதலாவதாக விகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பின்பற்றினால் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும். இரண்டாவது முறை, சிறுபான்மையினருக்கென சில இடங்களை ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறான கருத்தியல்கள் முன்வைக்கப்பட்டாலும் நடைமுறையில் எதிர்மறையான விளைவுகளே காணப்படுகின்றன.
அந்தவகையில் தமிழ் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளடங்கலாக சுமார் 121,606 தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் மாவட்டமாக கேகாலை மாவட்டம் காணப்படுகின்றது. ஆனால் அங்குள்ள மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் என்பது கேள்விக்குறியான நிலையிலேயே காணப்படுகின்றது. மேலும் இவர்கள் தொடர்ந்தும் பெரும்பான்மை இன சிங்கள தலைமைத்துவத்தின் கீழ் ஆளப்பட்டு வருகின்ற நிலையிலுள்ளனர், பல்லின மக்கள் இணைந்து வாழ்வதனால் வாக்குபலம் என்பது பெருபான்மை சமூகத்தினையே சென்றடைகின்றது.
இம் மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநித்துவம் என்பது சாத்தியமற்றும் போயுள்ளது.
தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்காமைக்கான காரணம் என்ன?, இப் பிரச்சினைகளை
நிவர்த்திப்பதற்கான தீர்வு என்ன? என்பது நடைமுறையில் பெருமளவானவர்களின்
வினாவாக காணப்படுகின்றது. இவ் வினாக்களுக்கு விடைக் காணும் வகையில்
இவ்வாய்வு அமையப் பெற்றுள்ளது. |
en_US |