dc.contributor.author |
சேதீஸ் குமாரி, ராஜேந்திரன் |
|
dc.date.accessioned |
2024-09-24T06:29:30Z |
|
dc.date.available |
2024-09-24T06:29:30Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1355 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15746 |
|
dc.description.abstract |
இன்றைய சூழலில் அபிவிருத்தி என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. இத்தகைய அபிவிருத்தியில் பெண்களின் நிலையானது பெரும் சவாலினை முகம் கொடுத்து வருகின்றது. பெண்களின் அபிவிருத்தியானது தடைபடுவதற்கு மிக முக்கிய காரணங்களாக வறுமை, வீட்டுச் சுமை, சுய தொழில் இன்மை, வருமானம் இன்மை போன்றவற்றினை எம்மால் கூற முடியும். எனவே இவற்றில் இருந்து பெண்கள் அபிவிருத்தியினை நோக்கி நகருதல் என்பது இன்றியமையாததாகும். ஆகவே இத்தகைய பெண்களின் அபிவிருத்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் தாக்கம் செலுத்தினாலும் அதன் தாக்கத்தில் பல சவால்கள் காணப்படுகின்றன எனக் கூறலாம்.
எனவே இதனை அடிப்படையாகக் கொண்டே தன்னாமுனை கிராம சேவகர் பிரிவில் பெண்களின் அபிவிருத்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழிலில் ஏற்படுத்தும் தாக்கம் என்பதனை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது. இவ் ஆய்வின் முறையியல்களாக பண்பு ரீதியிலான விடயங்கள் உள்ளடக்கப்பட்ட போதிலும் எண்ரீதியிலான விடயங்களும் தேவைக்கேற்ப உள்ளடக்கப்பட்டுள்ளது. தரவு சேகரிக்கும் முறைகளாக தன்னாமுனை கிராம சேவகர் பிரிவில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களினை மேற்கொள்ளும் பெண்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை மேற்கொள்ளும் பெண்களில் 14 பேர் எளிய எழுமாற்று அடிப்படையில் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்தின் மூலம் தரவு சேகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நேர்காணல், கலந்துரையாடல் முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் அபிவிருத்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் ஏற்படுத்தும் தாக்கம் தன்னாமுனை கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு என்ற இவ் ஆய்வானது சிறிய மற்றும் நடுத்தர தொழில் சார்ந்து பெண்களுக்கு காணப்படும் புரிந்துணர்வு, அவற்றினை மேற்கொள்ளும் போது ஏற்படும் சவால்கள், தொழில்களை செய்வதற்கான காரணம் அதன் மூலம் அபிவிருத்தியில் உள்ள நிலை போன்ற விடயங்களை விளக்குவதாக அமைந்துள்ளது. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் |
en_US |
dc.subject |
பெண்கள் |
en_US |
dc.subject |
அபிவிருத்தி |
en_US |
dc.subject |
தன்னாமுனை |
en_US |
dc.title |
பெண்களின் அபிவிருத்தியில் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் ஏற்படுத்தும் தாக்கம் தன்னாமுனை கிராம சேவகர் பிரிவை மையமாகக் கொண்ட ஓர் சமூகவியல் ஆய்வு |
en_US |
dc.type |
Thesis |
en_US |