dc.description.abstract |
இன்றைய காலத்தில், சமூக பண்பாடு, பாரம்பரியங்கள், மரபுகள், கலைகள், நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் முதலிய அனைத்தும் சமூக கட்டமைப்பின் வளர்ச்சியுடன் தொடர்புபட்டு பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு அல்லது பின்பற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வந்தாறுமூலை கிழக்கு பகுதியில் காணப்படுகின்ற வந்தாறுமூலை, தேவபுரம் ஆகிய கிராமிய கட்டமைப்புகளில் இந்த மரபு ரீதியான நம்பிக்கைகள் என்பது காலம் காலமாக பகிரப்பட்டும், கடத்தப்பட்டு வருகின்ற ஒரு சமூகத் தோற்றப்பாடாக விளங்குகின்றது.
இந்த வகையில், ஆய்வு பிரதேசத்தில் பின்பற்றப்பட்டு வருகின்ற மரபு ரீதியான நம்பிக்கைகள் ஆய்வு பிரதேச கிராமிய கட்டமைப்பின் கூறுகள், அமைப்புகள் மீது செல்வாக்கு செலுத்தி பலதரப்பட்ட சமூக செயற்பாடுகளை தோற்றுவிக்கும் அடிப்படையான காரணியாக விளங்குகின்றன. இச்செயற்பாடுகள் ஆய்வு பிரதேச கிராமிய கட்டமைப்பிற்கு நன்மையா தீமையா என்பதை தாண்டி இன்று அளவிலும் இவை இப்பகுதியில் நிலை பெற்றுள்ளமை ஆராயப்பட வேண்டிய ஒன்றாக விளங்குகின்றது.
நகர்ப்புற பகுதிகளிலும் பார்க்க கிராமிய கட்டமைப்பில் இதன் செல்வாக்கு, தாக்கங்கள், போக்கு என்பன விரிவடைந்து செல்கின்றன. இந்நிலையே ஆய்வு பிரதேசத்தில் நிலவுகின்றது. இதனால் ஆய்வு பிரதேச கிராமிய கட்டமைப்பில் எவ்வாறான காணப்படுகின்ற மரபு ரீதியான நம்பிக்கைகள் காணப்படுகின்றன, கிராமிய கட்டமைப்பில் அவற்றின் செல்வாக்கு, அவற்றின் வரலாற்று பின்னணி மற்றும் அவற்றின் சமூக செயல்பாடுகள் போன்றவற்றினை ஆராய முகமாக இந்த
மானிடவியல் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூகவியல் சிறப்புக் கற்கையின் இறுதிப் பகுதியை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாய்வானது ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இவ்வாய்வுக் கட்டுரையானது "மாறி வரும் கிராமிய கட்டமைப்பில் மரபு ரீதியிலான நம்பிக்கைகளின் சமூகச்
செயற்பாடுகள் வந்தாறுமூலை கிழக்கு கிராம சேவகர் பிரிவை மையப்படுத்திய ஒரு
மானிடவியல் ஆய்வு 2023" எனும் தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வுக்கான தரவுகள் எளிய எழுமாற்று மாதிரியைப் பயன்படுத்தி நேர்காணல், செவ்விக்காணுதல், அவதானம் எனும் முறைகளினூடாக சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகளானது பண்பு ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வு பிரதேச கிராமிய கட்டமைப்பில் எவ்வாறான காணப்படுகின்ற மரபு ரீதியான நம்பிக்கைகள் காணப்படுகின்றன, கிராமிய கட்டமைப்பில் அவற்றின் செல்வாக்கு, அவற்றின் வரலாற்று பின்னணி மற்றும் அவற்றின் சமூக செயல்பாடுகள் போன்றன கணட்றியப்பட்டுள்ளன. |
en_US |