dc.description.abstract |
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிருஸ்ணபுர கிராமத்தை மையப்படுத்திய "இளவயது திருமணம் காரணமாக பெண்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகள் ஓர் சமூகவியல் ஆய்வு" என்னும் தலைப்பின் கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரலாறு தோறும் பெண்கள் பல்வேறுப்பட்ட சமூக காரணிகளினால் பாதிப்படைந்து வருவதுடன் சமூக முன்னேற்றத்திலும் பின்தங்கிய நிலையிலும் காணப்படுகின்றனர். அந்தவகையில் பெண்களின் வாழ்வியலில் பாதிப்பை ஏற்படுத்தும் சமூக காரணிகளில் இளவயது திருமணமும் காணப்படுகின்றது. சமூகத்தில் சட்ட ஏற்பாடுகள் காணப்பட்டும் சமூத்தின் ஒழுங்கற்ற செயற்பாடுகள் இத்தகைய பாதகமான விளைவுகள் சமூகத்தில் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன. வடகிழக்கில் ஏற்பட்ட சமூக தளர்வுகள் அதிகளவிலான இளவயது திருமணங்கள் அதிகரித்து வருகின்றமைக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் இப் பகுதியில் அதிகளவிலான பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ஆகும். பெண்கள்
எனவே இதனை அடிப்படையாக கொண்டு இவ் கிராமத்தில் அதிகளவிலான இளவயது திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்களை கண்டறிதல் மற்றும் அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பாதிப்புக்கள் போன்றவற்றை கண்டறியும் நோக்கத்துடன் ஆய்வு பிரதேசத்தில் இளவயது திருமணம் செய்து கொண்ட 50 பெண்களை மாதிரியாக கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்காக முதலாம் நிலை தரவுகளாக அப் பெண்களிடம் வினாக்கொத்து, கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள். சஞ்சிகைகள், பத்திரிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் மூலமும் திரட்டப்பட்டுள்ளன.
இவ்வாய்வு பிரதேசத்தில் இளவயது திருமணத்திற்கான காரணங்களாக வறுமை, காதல், பெற்றோர் வெளிநாடு செல்லல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இடம்பெறுகின்றது. இதனால் இப் பெண்கள் உடல், உள, சமூக, பொருளாதார ரீதியாக பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் சமூக பாதிப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இச் சமூகம் முன்னேறத்திலும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. என்பதை இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இப் பிரச்சினைக்கான தீர்வாலோசனைகளும் இவ் ஆய்வில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகும் |
en_US |