Abstract:
குடும்பம் என்பது ஒரு பாதுகாப்பான இடம் என்றும், வன்முறைகளில் இருந்து பாதுகாப்பு பெறவும், மற்றும் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும், குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கும் இடமாகவும் அது இருக்கும் என்ற எண்ணம் மருவிவருவதனைக்கான முடிகிறது. உண்மையில் பெண்களுக்குக்கெதிரான தனிப்பட்ட வன்முறைகள் அதிகம் இடம்பெறும் இடமாக குடும்பம் காணப்படுகிறது பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றைய சூழலில் வீட்டு வன்முறையினால் பெண்கள் பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.
அதனடிப்படையில் குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் நிலவும் வலுவான ஆணாதிக்க உணர்வினாலும் சமூகத்தில் உயர் நிலையில் வைத்து பார்க்கப்பட வேண்டிய பெண்கள் தாழ்ந்த நிலையில் காணப்படுவதனால் அவை குடும்ப வன்முறைக்கு காரணமாக அமைகிறது. இதனால் பெண்கள் சமூகத்திலிருந்து ஒடுக்கப்பட்டவர்களாகவும் பாராபட்சப்படுத்தப்படுகின்றவர்களாகவும் உள்ளனர். இவை குடும்பக் கட்டமைப்பில் சீர்குலைவினை ஏற்படுத்தவும் காரணமாக அமைந்தது. இது பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினையாகக் காணப்படுகிறது. மேலும் போதிய கல்வியறிவற்ற தன்மை, வேலையின்மை போன்றவற்றினால் பெண்கள் ஆண்களின் உழைப்பை நம்பி வாழும் நிலை குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படுகிறது. இது குடும்ப வன்முறைக்கு காரணமாக அமைகிறது.
இதனால் பெண்கள் பல்வேறு உடல், உள, சமூக, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றமடைவது கடினத்தன்மையுடையதாக உள்ளது. இதனை கருத்திற் கொண்டு பெண்கள் வீட்டு வன்முறையிலிருந்து விடுபட்டு ஆண்களுக்கு சமமாகவும் சுயமாகவும் சுதந்திரமாகவும் இயங்கும் ஆற்றலைப் பெற வேண்டும் சமூகம் பெண்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் துணை நிற்க வேண்டும் எனும் அடிப்படையில் இப் பிரச்சினைக்கான தீர்வினையும் பரிந்துரைகளையும் முன்வைக்கும் ஆய்வாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
சமூகவியல் சிறப்புக் கற்கையின் இறுதிப் பகுதியை பூர்த்தி செய்யும் வகையில் இவ்வாய்வானது ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஐயண்கேணி கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஓர் சமூகவியல் ஆய்வு” எனும் தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்கான தரவுகள் எளிய எழுமாற்று மாதிரியைப் பயன்படுத்தி வினாக்கொத்து, நேர்காணல், கள ஆய்வு, அவதானம் எனும் முறைகளினூடாக சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகளானது அளவு ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் பகுப்பாய்வு செய்யப்பட்டு பகுப்பாய்வின் மூலமாக வீட்டு வன்முறைக்கான சமூகக்காரணிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.