dc.description.abstract |
இலங்கையில் அமைக்கப்பட்ட பழைமை வாய்ந்ததும், பள்ளிவாசல்களுள் முதன்மையானதுமாக பேருவளை பிரதேசத்தில் அமைந்துள்ள அப்ரார் பள்ளிவாசல் காணப்படுகின்றது. இஸ்லாத்தை ஏற்ற அரபு வணிகர்கள் இலங்கையில் குடியேறிய போது இப்பள்ளிவாசலை அமைத்தனர். இப்பள்ளிவாசலின் வரலாற்றுத் தொன்மையையும் அதன் வளர்ச்சியையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் முதன்மை நோக்கமாகும். பள்ளிவாசலின் வரலாறு தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் முரண்பட்ட தன்மைகளும் காணப்படுகின்றன. இப்பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு அப்ரார் பள்ளியின் தொன்மையும் வரலாறும் ஆராயப்படுகின்றது. இவ்வாய்விற்கு வரலாற்று ஆய்வு முறை பயன்படுத்தப்படு கடந்த கால வரலாற்று ஆவணங்களை பகுப்பாய்வு செய்து ஆய்வு முடிவுகள் பெறப்படுகின்றன. கள ஆய்வு மூலம் பெறப்பட்ட தரவுகளும், பள்ளிவாசல் தொடர்பான ஆவணங்களும் முதல் நிலைத் தரவுகளாகவும், பள்ளிவாசல் தொடர்பாக வெளியிடப்பட்ட இதழ்கள், நூல்கள், பத்திரிகைகள், கட்டுரைகள், இணையதள தகவல்கள், சஞ்சிகைகள் 51657L1651 இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் கொள்ளப்படுகின்றன. ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் 10ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பேருவளை பிரதேசத்தில் குடியேறிய அரபு வணிகர்கள் தமது கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்காக சிறு பள்ளிவாசலை கட்டியிருந்தார்கள் என்பதை வாய்மொழிக் கதைகளினூடாக அறிய முடிகின்றது. இப்பள்ளிவாசலின் வளர்ச்சியால் 1986 ஆம் ஆண்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. புனர்நிர்மானம் செய்வதற்கு முன்னர் காணப்பட்ட பள்ளிவாசலின் முகப்பானது ஒல்லாந்தர் கால கட்டடக்கலைப்பாணியில் அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாசல் இஸ்லாமிய கட்டடக்கலையம்சங்களையும் ஆரம்ப பள்ளிவாசலின் முன்தோற்ற வடிவத்தையும் தழுவியே கட்டப்பட்டுள்ளது. ஆரம்ப கால பணியாளர்கள் பற்றிய விடயங்களும் வாய்மொழியாகவே அமைகின்றன. மேலும் புதிதாக ஜமாத் சபையும் கொண்டுவரப்பட்டதை காணலாம். இச்சபையானது காலப்போக்கில் வழுவிழந்து முழு நிர்வாகமும் நிர்வாக சபையின் கைகளில் கொண்டு செல்லப்பட்டது. இப்பள்ளிவாசலானது அதன் ஆரம்ப காலம் தொட்டு முழுமையாக இறை வணக்கவழிபாட்டிற்காக பயன்படுத்தப்பட்டுவந்து தற்காலத்தில் அச்சமூகத்துடன்
இணைப்பிரியாததாகக் காணப்படுகின்றது. |
en_US |