dc.description.abstract |
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள குருமண்வெளிக் கிராமத்தில் மரணக்கிரியை
முறைகள்
தனித்துவமாகப் பேணப்படுகின்றது. இங்கு வாழ்கின்ற இந்து மற்றும்
மெதடிஸ்த கிறிஸ்தவ மக்கள் வேறுபட்ட மரணச் சடங்கு முறைகளை
பின்பற்றுகின்றனர். அதன் அடிப்படையில் இங்குள்ள இருவேறு சமூகங்களின் ஒத்த
மற்றும் வேறுபட்ட மரபுகளை கண்டறிவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும்.
வரலாற்று அணுகு முறையினூடாக மரணக் கிரியைகள் ஆராயப்பட்டுள்ளது. அதற்காக
குருமண்வெளிக் கிராமத்தில் நேர்காணல், அவதானம் செய்யப்பட்டு மற்றும் நூல்கள்
சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் மூலமாக பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில்
வியாக்கியானம் செய்யப்பட்டு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாய்வின்
மூலமாக இந்துக்களுக்குரிய மரணச் சடங்கு முறையானது அவர்களுக்கே உரிய
கலாசார பாரம்பரியத்துடன் நிகழ்த்தப்படுவதோடு கிறிஸ்தவர்களுடைய மரணச் சடங்கு
முறையானது திருச்சடை பாரம்பரியத்துக்கு அமைவாக நிகழ்த்தப்படுவதைக்
காணக்கூடியதாக உள்ளது. மரணம் நிகழ்ந்ததை அனைவருக்கும் தெரியப்படுத்துகின்ற
மரபு, மரணம் நிகழ்ந்த பின்னர் அங்கு வாசகங்கள் ஓதப்படுகின்ற வழக்கம்.
இந்துக்கள் வாய்க்கரிசி போட்டும் கிறிஸ்தவர்கள் இறந்தவரின் காலில்
வாசனைத்திரவியம் தெளித்து இறுதி மரியாதை செய்கின்றமை போன்ற சில கிரியை
முறைகளில் இரு சமூகத்தாரும் ஒற்றுமைப்பட்டு காணப்படுகின்றனர். இந்துகளின்
மத்தியில் இறந்தவரின் வீட்டில்
F60
வைக்கின்ற முறையானது
தனிச்சிறப்பாகவே பின்பற்றப்படுகின்றது. இந்துக்கள் இறப்பிற்கு முன் ஒருவர்
நோய்வாய்ப்பட்டு உயிர் உடலை விட்டுப் பிரிகின்ற வேளையில் இறுதியாக பால்
பருக்குவாதை ஒரு சடங்காகவே மேற்கொள்வார்கள், இறந்தவரின் உடல் வைக்கப்படும்
திசை. இந்துக்கள் இறந்தவரின் உடலின் தலைமாட்டில் குத்துவிளக்கேற்றல் போன்ற
கிரியை முறைகளில் இரு சமூகத்தாரும் வேறுபட்டும் காணப்படுகின்றனர். இவ்வாறான
கிரியை முறைகளில் கிறிஸ்தவர்கள்
இருசமூகங்களினதும் பண்பாட்டு
இடையூடாட்டத்தின் ஊடாக ஒரு சில சடங்கு முறைகள் இந்துக்களின் மரணச்
சடங்கில்
இருந்து கிறிஸ்தவ மரணச் சடங்குகள் பிரதிபலிப்பதைக்
காணக்கூடியதாகவுள்ளது. இந்து மற்றும் மெதடிஸ்த கிறிஸ்தவ மரணக்கிரியையின்
தனித்துவமும் ஒத்த மற்றும் வேறுபட்ட மரபுகளும் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவை
தெளிவாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. இம்மரணச் சடங்குகள் ஆரம்ப காலம் தொட்டு
தற்காலம் வரை பாரம்பரியத்தையும் தனித்துவத்தையும் பேணும் வகையில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. |
en_US |