dc.description.abstract |
"கரைதுறைப்பற்று சப்த கன்னிமார் வழிபாடு ஓர் ஆய்வு" எனும் தலைப்பில் அமைந்த இவ்வாய்வானது முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினுள் அமையப்பெற்றிருக்கும் வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்தினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகணங்களுள் ஒன்றாக அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டம் ஆறு பிரதேச செயலகங்களைத் தன்னுள் கொண்டுள்ளதுடன், அவற்றில் ஒன்றாகக் கரைதுறைபற்று பிரதேசமானது அமைந்துள்ளது. இப்பிரதேசமானது தன்னுள் சிறந்த இயற்கை வளத்தினையும், மனித வளத்தினையும் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளது. மேலும் இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க பல ஆலயங்களும் அமைந்துள்ளதுடன் அத்தகைய ஆலயங்களுள் ஒன்றாக வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயம் காணப்படுகின்றது. சப்த கன்னியரின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்ற வகையில், இவ்வாலயத்தின் வரலாறு அமைந்துள்ளது. மேலும் ஆகமம் சாரா அன்னையர் எழுவரின் தனித்துவத்தினை எடுத்துக்காட்டுவதாக இவர்களது பாரம்பரியமான வழிபாட்டுச் சடங்குகள், கிராமிய வழிபாட்டின் அடையளமாக விளங்குவதுடன், இத்தகைய வழிபாட்டுடன் இணைந்தவகையில் பாரம்பரியமான கலையம்சங்களும் அமையப்பெற்றுள்ளது. இவையனைத்தும் அப்பகுதிவாழ் மக்களின் வாழ்வியலுடன் இணைந்துள்ள அதேநேரம், இன்றைய காலகட்டத்தில் கிராமிய வழிபாட்டு முறைகளில் தாக்கம் செலுத்தி வருகின்ற ஆகமம் சார் வழிபாட்டு முறைகள் வட்டுவாகல் சப்த கன்னிமார் ஆலயத்திலும் தனது ஆதிக்கத்தினைச் செலுத்தியுள்ளது. அத்தகைய ஆதிக்கமானது சமூக மற்றும் பொருளாதாரக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் காலப்போக்கில் மரபுரீதியிலான வழிபாட்டு முறையிற்கும். அதனுடன் இணைந்தவகையிலான நடைமுறைகளிற்கும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது |
en_US |