| dc.contributor.author | கனிஸ்ரன் கிறிஸ்ரி, மொடன் பிரான்சிஸ் | |
| dc.date.accessioned | 2024-09-26T04:41:24Z | |
| dc.date.available | 2024-09-26T04:41:24Z | |
| dc.date.issued | 2023 | |
| dc.identifier.citation | FAC 1367 | en_US |
| dc.identifier.uri | http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15758 | |
| dc.description.abstract | தென்னாசியாவில் பல்லினப் பண்பாடு கொண்ட நாடுகளில் இலங்கைத் தீவும் ஒன்றாகும். இதற்கு வரலாற்றுத் தொடக்க காலத்திலிருந்து பல இன, பல மதப் பண்பாடுகள் கொண்ட மக்கள் பிற நாடுகளில் இருந்து இங்கு வந்து சென்றதும், அவர்களில் சிலர் காலப்போக்கில் இலங்கையின் நிரந்தர குடிமக்களாக மாறியதும் காரணமாகும்.16ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட கீழைத்தேச ஐரோப்பிய காலனித்துவத்தின் தாக்கத்திற்கு இலங்கையும் உட்படுத்தப்பட்டிருந்தது. அதன் விளைவாக பல எதிர்மறையான, நேர்மறையான விளைவுகளையும் அது சந்தித்தது. குறிப்பாக போர்த்துக்கேயரின் இலங்கை வருகையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட முக்கியமான விளைவாக இலங்கையில் கத்தோலிக்க சமயம் பரம்பல் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யாழ்குடா பகுதியில் ஏற்படுத்தப்பட்ட கத்தோலிக்க சமயம் பரம்பல் எவ்வாறு? ஏன்? எனும் வினாவை இன்று வரை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அதற்காக அவர்கள் கையாண்ட வழிமுறைகள் இன்றுவரை வாதப், பிரதிவாதமாக இருந்து வருகின்றது. எனவே இலங்கையின் யாழ்குடா பகுதியில் போர்த்துக்கேயரால் ஏற்படுத்தப்பட்ட கத்தோலிக்க சமயப் பரப்புகைக்கான சூழ்நிலைகளும், அவர்கள் பரப்புவதற்கு மேற்க்கொண்ட வழிமுறைகளையும் ஆராய்ந்து அவ்வாறான வாதப்பிரதிவாதத்திற்கு தீர்வு காண்பது முக்கியமானதொன்றாகும். இவ்வாய்வானது போர்த்துக்கேயரின் சமய பரப்புகை யாழ்குடா பகுதியில் எவ்வாறு பரப்பப்பட்டமை பற்றி எடுத்துக் கூறுவதாகும். | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka | en_US |
| dc.subject | யாழ் குடா | en_US |
| dc.subject | போர்த்துக்கேயர் | en_US |
| dc.subject | சமயப் பரப்புகை | en_US |
| dc.subject | குடா | en_US |
| dc.title | யாழ் குடா நாட்டில் போர்த்துக்கேயரின் சமயப் பரப்புகைக் கொள்கை - ஓர் வரலாற்று ஆய்வு | en_US |
| dc.type | Thesis | en_US |