dc.description.abstract |
வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உளள் ஒவ்வொரு பிரதேசங்களும் ஏதேவொரு வகையில் மிக நீண்ட வரலாற்றுப் பாரமாரியத்தைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதியில் உள்ள அனலைதீவு கிராமமும், அங்குள்ள ஐயனார் ஆலயமும் மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் இவ்வாலயமானது தனித்துவமான வழிபாட்டு அம்சங்களைக் கொண்டு காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் வட இலங்கையில் தொன்மை மிகு ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுன்ற அனலைதீவு ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனாரின் தொன்மையையும், வரலாற்றையும், இக்கிராமத்தின் வரலாற்றையும் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வானது வரலாற்று அணுகுமுறையினூடாக அனலைதீவு ஐயனார் வழிபாட்டின் தொன்மையினை வெளிகாட்டும் வகையில் இவ்வாய்விற்காக முதன் நிலைத்தரவுகளாக களப்பயணம், நேர்காணல், அவதானம், கோயில் ஆவணம், போன்றவையும் இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள், இணையத்தளங்கள் என என்பன ஊடாக வியாக்கியானம் செய்யப்பட்டு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலமாக அனலைதீவு கிராமத்தின் வரலாற்றையும், ஸ்ரீ ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயத்தின் வரலாற்றுத் தொன்மையினையும், எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது பற்றி வரலாற்று உண்மைகளும் வெளிக்கொணரப்பட்டுள்ளது. மேலும் அனலைதீவு கிராமத்தில் ஆரம்பத்தில் இந்து மதமே செழிப்புற்றிருந்தது. மதம் சார்ந்த கோயில்கள் எழுச்சி பெற்றுள்ளன. இக்கிராமத்தில் காவல் தெய்வங்களை மக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்க்காகவும், தம்முடைய குலவிருத்திக்காகவும், கிராமத்தின் செழிப்பிற்கும் வழிபடுகின்றனர். இக்கிராமத்தில் பல்வேறுபட்ட சமூகப்பிரிவுகள் காணப்பட்ட போதிலும் ஆரம்ப காலத்தில் ஆலயத்தோடு வேளாளர் சமூகத்தினரே நிர்வாகத்தில் செல்வாக்கை பெற்றிருந்தனர். ஆனால் 1980 ஆண்டிற்கு பின்னர் அவ்நிலையிலிருந்து மாறுபட்டதாகவே காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது |
en_US |