dc.description.abstract |
வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசங்களும் ஏதோவொரு வகையில் மிக நீண்ட வரலாற்றுப் பாரமாரியத்தைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரிவில் உள்ள மட்டுவில் கிராமமானது மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன் இக்கிராமத்தில் காணப்படுகின்ற கிராமிய வழிபாட்டின் தன்மையினையும் மற்றும் அண்ணமார் ஆலயமானது தனித்துவமான வழிபாட்டு அம்சங்களையும் கொண்டு காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் வட இலங்கையில் தொன்மை மிகு கிராமங்களில் ஒன்றாகக் காணப்படுன்ற மட்டுவில் கிராமத்தின் தொன்மையையும் அங்குள்ள கிராமிய வழிபாட்டையும், இக்கிராமத்தில் உள்ள அண்ணமார் ஆலய வழிபாட்டின் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். வரலாற்று அணுகுமுறையினூடாக மட்டுவில் கிராம கிராமிய வழிபாடானது ஆசியாவில் ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளோடு ஒப்பீட்டு ஆராயப்பட்டுள்ளது. அதற்காக மட்டுவில் கிராமத்தில் நேர்காணல், அவதானம் செய்யபட்ட தரவுகள், நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள் மூலமாகப் பெறப்பட்ட பண்புசார் தரவுகளினூடாக வியாக்கியானம் செய்யப்பட்டு முடிவுகளும் கண்டறியப்பட்டுள்ளது. மட்டுவில் கிராமத்தில் உள்ள அண்ணமார் ஆலயம் மடைபரவல், வெறியாடல், வருடத்தின் மூன்று மடை, பலியிடல்(ஆடு, சேவல்) போன்ற தனித்துவமான வழிபாட்டு முறையினைக் கொண்டுள்ளது எனலாம். மட்டுவில் கிராமத்தின் வரலாறானது இலங்கையில் சோழராட்சி இடம்பெற்ற காலப்பகுதி குறிப்பாக, கிராமத்தில் ஆரம்பத்தில் கிராமியத் தெய்வ வழிபாடு சார்ந்த இந்து மதமே செழிப்புற்றிருந்தது. கிராமியத் தெய்வ மரபைச் சார்ந்த இந்து மதம் சார்ந்த கோயில்கள் எழுச்சி பெற்றுள்ளன. கஜபாகு காலத்தில் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட கண்ணகை வழிபாடானது மட்டுவில் கிராமத்திலும் பரவி அங்கு நிலையான கிராமிய வழிபாட்டோடு கூடிய ஒரு ஆலய அமைப்புடன் கிராமியத் தெய்வத்தின் வழிபாடானது இன்று வரை காணப்படுகின்றது. என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தில் காவல் தெய்வங்களை மக்கள் தங்களுடைய கிராமத்தின் காவலுக்காகவும், தம்முடைய குலவிருத்திக்காகவும், கிராமத்தின் செழிப்பிற்கும் வழிபடுகின்றனர். இக்கிராமத்தில் பல்வேறுபட்ட சமூகப்பிரிவுகள் காணப்பட்ட போதிலும் பள்ளர், நளவர் போன்ற சமூகப்பிரிவினரே அதிகம் காணப்படுகின்றனர். இவர்கள் தங்களுடைய குலதெய்வமாக அண்ணமார் தெயவத்தை வழிபட்டு அத்தெய்வத்திற்கு ஆகமம் சாராத வழிபாடுகளையும் செய்து வருகின்றனர். ஆரம்காலம் தொட்டு அண்ணமார் வழிபாட்டில் மக்கள் மிகுந்த பஃபக்தியுடனே வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். எவ்வாறாயினும் மட்டுவில் கிராமம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதெனவும இக்கிராமத்தில் உள்ள கிராமிய வழிபாட்டின் தன்மையினையும், கிராமத்தின் அன்ணமார் ஆலயத்தின் வழிபாடானது தனித்துவமான
வழிபாட்டு அம்சங்களைக் கொண்டு காணப்படுவதாகவும் காணப்படுகின்றது என்பதும்
குறிப்பிடத்தக்கது. |
en_US |