Abstract:
தற்கால ஆய்வாரள்ள்கள் மத்தியில் பிரதேசங்களின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதற்கு அப்பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றை அடிப்படையானதாகக் கொள்கின்ற கோட்பாடு தற்காலத்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில் பட்டிப்பளைப் பிரதேசத்தினுடைய வரலாற்றை வெளிக்கொண்டுவருவதற்கு. அப்பிரதேசத்தில் வாழ்ந்த போடிமாரினுடைய வரலாற்றினையும் அவர்களது பண்பாடுகளையும் ஆய்வு செய்வதனூடாக பட்டிப்பளைப் பிரதேசத்தில் வாழ்ந்த போடிமாரின் வரலாறுகளையும், பண்பாடுகளையும் வெளிப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும். இப்பிரதேசத்தில் போர்த்துக்கேயராட்சிக்காலத்தில் வாழ்ந்த போடிமார் அவர்களின் ஆட்சியை எதிர்த்துள்ளார்கள். ஒல்லாந்தராட்சிக்காலத்தில் அவர்களிடம் அதிகாரம் பெற்றவர்களாக அறுமக்குட்டிப்போடி, கந்தப்போடி, மண்முனைப்போடியார். கதிராமப்போடியார் போன்ற போடிமாரும் அரசியல் அதிகாரம் பெறாத போடிமாரும் இங்கு வாழ்ந்துள்ளார்கள். பிரித்தானியராட்சிக்காலத்தில் குஞ்சிலயாப்போடியார். கதிரமலைப்போடியார். வீரபத்திரப்போடியார், வீமாப்போடியார் போன்ற போடிமார் வாழ்ந்துள்ளார்கள் இப்போடிமாரில் பெரும்பாலானவர்கள் அம்பிளாந்துறைக் கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். அதேபோன்று அரசடித்தீவு, பண்டாரியாவெளி, மகிழடித்தீவு. முதலைக்குடா போன்ற கிராமங்களிலெல்லாம் இன்று வரை பெயர் குறிப்பிடக்கூடியளவு சிறப்பாக வாழ்ந்த போடிமாரின் வரலாறுகள் ஆதாரபூர்வமாக இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்களின் அரசியல் நிர்வாகச் செயற்பாடுகள். சமூகப் பணிகள், பொருளாதார நடவடிக்கைகள். சமய ரீதியில அவர்கள் அக்கறையுடன் செயற்பட்டு ஆலயங்களை அமைத்ததுடன் பண்பாட்டு விருத்திக்கு அவர்கள் ஆற்றிய பணிகள் என்பனவும் போடிமாரது வாழ்வியலுடன் இணைந்திருந்த அவர்களது விவசாயப் பண்பாடு. கலைப் பண்பாடு, உணவு முறைகள், ஆடை அணிகலன்கள் போன்ற பண்பாட்டம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வரலாற்றுத் தகவல்கள் இலக்கிய மற்றும் தொல்லியல் ஆதாரங்களூடாக உறுதிப்படுத்தி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசம் தொடர்பாக இனிவரும் காலங்களில் ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இவ்வாய்வு மிக்க பயனுள்ளதாக அமையும்.