dc.description.abstract |
சைவ மக்கள் இரண்டு வகையான வழிபாட்டு முறைகளைக் கையாள்கின்றனர். ஒன்று ஆகம வழிபாட்டு முறை மற்றையது ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டு முறையாகும். இக் கிராமிய வழிபாட்டு முறையினையே சிறுதெய்வ வழிபாட்டு முறை என அழைக்கின்றனர். இவ் வழிபாடானது கிராமப்புற மக்களின் வழிபாடாகவும் காணப்படுகின்றது. சிறு தெய்வ வழிபாடானது இலங்கையில் வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது. எனவே எனது ஆய்வானது வரணிக் கிராமமும் சிறுதெய்வ வழிபாட்டு மரபும் ஓர் வரலாற்று நோக்கு" என்னும் அடிப்படையில் வரணிக் கிராமத்தினை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டில் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டதாக வரணிக் கிராமம் அமைந்திருக்கின்றது. இங்கு அதிகளவான சிறு தெய்வங்கள் வழிபடப்படுவதுடன், அவற்றிற்கான வழிபாட்டு முறைகளும் சிறப்பானவையாக காணப்படுகின்றன என்பதனை வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது வரணிக் கிராமத்தின் வரலாறு. அங்கு வாழ்கின்ற மக்களின் பண்பாடு, மரபுரிமை அம்சங்கள். பொருளாதாரம் என்பவற்றின் ஊடாக அவர்களின் வாழ்க்கையோடு இணைந்த வகையில் சிறுதெய்வ வழிபாடு எவ்வாறன நிலையில் காணப்படுகின்றது என்பதும். இங்கு வழிபடப்படுகின்ற சிறுதெய்வங்களினை பற்றியும். அவற்றிற்குரிய வழிபாட்டு முறைகள், மக்களால் நிறைவேற்றப்படுகின்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள், தற்காலத்தில் எவ்வாறான நிலையில் வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன. சிறுதெய்வ வழிபாட்டின் சிறப்பியல்புகள் போன்ற பல விடயங்கள் கள ஆய்வு, நேர்காணல், கலந்துரையாடல் போன்ற தரவு சேகரித்தல் முறைகளில் வரலாற்று ஆய்வு முறையியலிற்கு ஊடாக தெளிவாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. வரணிக் கிராமத்தில் சிறுதெய்வ வழிபாட்டில் தற்காலத்தில் ஆகம முறைசார்ந்த வழிபாட்டம்சங்களும் உட்புகுந்துள்ள போதிலும் சில வழிபாட்டு முறைகள் இல்லாது குறைவடைந்து செல்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இருப்பினும் இன்றும் பல வழிபாட்டு முறைகள் இயல்பான முறையிலும், எளிமையான முறையிலும் இக் கிராம மக்களால் சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிறுதெய்வ வழிபாடு பற்றிய ஆய்வுகள் பல இடம்பெற்றுள்ள போதிலும் வரணியில் சிறுதெய்வ வழிபாடுபற்றியும், அவற்றிற்குரிய வழிபாட்டு மரபுகள் பற்றியதுமான விடயங்களினை தனி ஆய்வாக மேற்கொள்ளப்படாத காரணத்தினால் இங்குள்ள சிறுதெய்வங்கள் பற்றி இனி வரும் காலங்களில் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு இவ்வாய்வு மிகவும் பயனுள்ளதாக
அமையும். |
en_US |