Abstract:
இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் ஆளுமை மிக்க தேசிய தலைவராகவும். அரசியல் சமூக அபிவிருத்தி சேவைகளில் சிறந்து விளங்கியவராகவும் மர்ஹீம் அல்ஹாஜ் மசூர் மௌலானா செனட்டர் இவர்கள் சிறப்பான இடத்தை பெறுகிறார்கள். இவருடைய அரசியல், சமூக பணிகளை ஆய்வு செய்து ஆவணமாக வெளியிடுவதே இவ்வாய்வினுடைய பிரதான நோக்கமாகும். வரலாற்று அணுகுமுறையினூடாக இவருடைய வரலாறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவராக காணப்பட்ட மசூர் மௌலானா தமிழ் மக்களின் பேராதரவையும், மதிப்பையும் பெற்றவராக காணப்பட்டார். தமிழர்களின் தேசிய விடுதலைக்கு ஆதரவாக செயற்பட்டமையும், இன, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியமையும் இதற்கான காரணமாகும். சோல்பரி பாராளுமன்றத்தின் செனட் சபையில் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் செனட்டர் ஆவார்.