Abstract:
இந்த ஆய்வானது சமூக வலைத்தளங்களில் பெண்களின் நிலை மற்றும் சமத்துவம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை மெய்யியல் நோக்குடன் ஆராய்கின்றது. அவ்வாறு ஆய்வின் அறிமுகம் எனும் முதலாவது அத்தியாயத்தையும், பெண்ணியம் பற்றிய தெளிவினை வழங்கும் வகையில்இரண்டாவது அத்தியாயத்தையும், சமூக வலைத்தளம் தொடர்பான அறிமுகத்தினை வழங்கும் பொருட்டு மூன்றாவது அத்தியாயத்தினையும், அதனை ஆராயும் நோக்குடன் நான்காவது அத்தியாயத்தையும் மற்றும் முடிவுரையையும், பரிந்துரைகளையும் வழங்கும் நோக்குடன் ஐந்தாவது அத்தியாத்தையும் கொண்டதாகவும் இரண்டாம் நிலைத் தரவுகளைக் கொண்ட ஆய்வாகவும் காணப்படுகிறது.