dc.description.abstract |
இன்றைய சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளில் ஒன்று வாழ்வின் நிலையாமை பற்றிய தெளிவின்மையாகும். வாழ்வின் நிலையாமை தொடர்பான தெளிவு சமூகத்திடம் இருக்குமாக இருந்தால் இன்று நிலையற்ற பொன், பொருள், செல்வங்கள், பாலியல் இன்பங்கள், பெண்கள், என பல்வேறு நிலையில்லாத ஆசைகளை வளர்த்து துன்பத்தின் பிடியில் மாட்டி வருந்தியவர்களாகத் திரிய மாட்டார்கள். ஒருவரின் துன்பத்திற்கு அவருடைய தீராத ஆசைகளே காரணமாக அமைகின்றது. பல சிறந்த செயல்களை செய்வதை விடவும் பெண்களின் மீது நாட்டம் கொண்டு திரிகின்ற மக்களுக்கும், இவ்வாறான வாழ்க்கை தத்துவத்தை அறியாத மக்களுக்கும் சித்தர்களுடைய கருத்துக்கள் உண்மையை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாய்வானது தூய தமிழர் சிந்தனைகளில் ஒன்றாக காணப்படும் சித்தர் தத்துவங்களில் பட்டினத்தார் தத்துவக் கருத்துக்களை மெய்யியல் ரீதியாக வரலாற்று, விமர்சன அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதன் மூலம் விபரிக்கின்றது. இந்நோக்கில் பட்டினத்தார் பாடல்கள் மனிதனுக்கு தேவையான அடிப்படை தத்துவங்களை வழங்கி இருக்கிறது. இதனை இன்றைய உலகியல் நடத்தைகளுடன் ஒப்பிட்டு நோக்க முடியும். மூடநம்பிக்கைகள் மீதும், தேவையற்ற விடயத்தின் மீதும் தனது கவனத்தைக் கொண்டிருக்கும் மக்கள் சரியான விடயங்களை மேற்கொண்டு வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இத்தத்துவம் இத்தகைய புரிதலை முதலில் கல்விப் பரப்பின் ஊடாக இலகுவாகக் கொண்டு சென்றிருக்கிறது. அதற்கு மெய்யியல் ஒரு பாதையாக அமைந்துள்ளது. இதனையே இவ்வாய்வு வலியுறுத்தி நிற்கிறது. |
en_US |