dc.description.abstract |
சமூகத்தில் மிகச்சிறிய அழகு குடும்பம் என்பது ஆகும். இந்த குடும்பம் பெற்றோர்கள் பிள்ளைகள் அடங்கிய ஒரு நிறுவனமாகவே திகழ்கிறது. இந்நிறுவனத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் தமக்கே உரிய வகையில் கடமைகளையும் பொறுப்புக்களையும் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். அவற்றை திருப்திகரமாக மேற்கொள்ளும் போதே அதன் நோக்கம் பூரணப்படுத்தப்படுகின்றது. அவற்றை அவர்கள் சரிவர நிறைவேற்றாத போது குடும்பத்திற்குள் பல பிரச்சனைகள், பிளவுகள் ஏற்படுகிறது. இருப்பினும் பெற்றோர்கள் தொழிலுக்குச் செல்லும் குடும்பத்தில் தங்களுடைய பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நடத்த முடியாத நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வானது ஆய்வுப் பிரதேசமாக தெரிவு செய்யப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமீன்மடு, அமிர்தகழி, புன்னைச்சோலை, திராய்மடு, கூழாவடி போன்ற கிராமங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாய்வு என்னால் மேற்கொள்ளவதற்கு பிரதான நோக்கமானது பெற்றோர்கள் இருவரும் தொழிலுக்கு செல்கின்ற குடும்பத்தில் (அரசு தொழில், தனியார் தொழில்) குறித்த குடும்பத்தில் உள்ள குழந்தைகள் உடலியல் உளவியல், ஒழுக்கவியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகளை சமூகத்திற்கு வெளிக்கொண்டு வருவதையும் அதே சமயம் இவர்களை எவ்வாறு குறித்த பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் சமூகத்திற்கு வெளிப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாய்வு என்னால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் முதலாம் நிலை தரவுகளாக நேர்காணல், வினா கொத்து, அவதானம் போன்றவை பயன்படுத்தப்பட்டதுடன் இரண்டாம் நிலைத்தரவுகளாக புத்தகங்கள். சஞ்சிகைகள் ஆய்வு கட்டுரைகள், இணையதளங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வின் மூலம் தொழிலுக்குச் செல்லும் பெற்றோர்களுடைய பிள்ளைகளில் செயற்பாடுகளில் உள்ள மறைத்தாக்கங்களை இழிவான ஆக்குவதன் மூலம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தினை கட்டி
எழுப்புவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு என்னால் மேற்கொள்ளப்பட்டது. |
en_US |