dc.description.abstract |
மெய்யியலிலும், விஞ்ஞானத்திலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒரு எண்ணக்கருவாக "பரிணாமம்" என்பது காணப்படுகின்றது. இது கீழைத்தேய மெய்யியலிலும் சிறப்பிடம் பெறுகின்ற ஒரு எண்ணக்கருவாகவும் அமைந்துள்ளது. அந்தவகையில், சாங்கிய தத்துவம் கூறும் பரிணாமக் கோட்பாட்டினை வேதாந்தத்தில் அத்வைதம் தொடர்பான சிந்தனைகளை முன்வைத்த சங்கரர் வேதாந்த தத்துவத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பதாகவே இவ்வாய்வு அமைந்துள்ளது. இவ்வாறான பரிணாமம் பற்றி விஞ்ஞானம், சமயங்கள் கூறும் கருத்துக்களையும் எடுத்துக்காட்டுவதோடு சாங்கியம், சங்கரர் வேதாந்தம் ஆகிய இரண்டு தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்டு ஒப்பீட்டு ரீதீயாக ஆராய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.
இந்த நோக்கத்தை அடைவதற்காக நான் பண்புசார் ஆய்வு முறையையே பயன்படுத்தியுள்ளேன். இதனால் இதற்கு இரண்டாம் நிலைத் தரவுகளே அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டன. இதற்கு ஆய்வு நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் மேலதிகமாக பயன்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் இது தொடர்பாக ஆராய ஆறு அத்தியாயப் பகுப்பு முறையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அத்தியாயத்திலும் பரிணாமம் தொடர்பாக பல விடயங்கள் ஆராயப்பட்டு இறுதியில் பரிணாமம் தொடர்பாக சாங்கியமும், சங்கரர் வேதாந்தமும் கூறியுள்ள கருத்துக்களை அடிப்படையாயக் கொண்டு இரண்டுக்குமான ஒற்றுமை, வேற்றுமைகளைப் பற்றி எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. |
en_US |