Abstract:
பிளேட்டோவின் அரசியல் பற்றிய சிந்தனைகள் ஒழுக்கவியலோடு தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றது. இன்றைய சமகாலத்தில் அரசியல் மிக மோசமாகக் போய்க்கொண்டிருக்கின்றன. போர், தனிமனித சமூக ஒழுங்கின்மைகள், சுயநலம் மற்றும் பேராசை என்பன மிதமிஞ்சிக் காணப்படுகின்றன. அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபடுபவர்களாகவும், தீமையின் மொத்த உருவங்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய தீமைகள் நிறைந்த அரசியல்வாதிகளால் உலகம் நரகமாகிக் கொண்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் தங்களுடைய சொந்த நலன்களுக்காக அரசியலை வணிகமாக்கி வருகின்றனர். இவ்வகையில் நாடுகள் சுயநலமான பேராசை நிறைந்த அரசியல்வாதிகளால் சுடுகாடாக மாறிக்கொண்டு வருகின்றது.
இத்தகைய பிற்புலத்தில் பிளேட்டோ முன்வைக்கும் இலட்சிய அரசின் பண்புகள் எந்த அளவு தூரம் தற்கால உலகிற்கு அவசியமானதாக உள்ளது என்பதை இவ்வாய்வு வலியுறுத்தி நிற்கின்றது