dc.description.abstract |
தற்கால நவீன உலகத்தில் உளவளத்துணையின் பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுகின்றது. இது ஒரு தனிமனிதனின் ஆளுமையை செவ்வனே வெளிக்கொண்டு வருவதற்க்கான ஆற்றுப்படுத்தலாக அமைகின்றது. இதனடிப்படையில் உளவள ஆலோசனையை மேம்படுத்தும் முகமாக ஆற்றுப்படுத்தல் செயற்பாட்டில் இதிகாசங்களைப் பயன்படுத்துவது சிறப்பானதாக அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு இவ்வாய்வு காணப்படுகின்றது.
அத்துடன், இவ்வாய்வானது நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வு கட்டுரைகள், இணையதளங்கள் என்பவற்றை பயன்படுத்தி அவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக அமைகிறது. எனவேதான், உளவியலில் உளவள ஆலோசனைச் செயற்பாட்டில் இதிகாசங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வாளனால் இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது.
எனவே, இத்தகைய உளவியல் செயற்பாட்டை எவ்வாறான முறையில் செயற்படுத்துவது என்பதை அடையாளப்படுத்துவதோடு, அவற்றுக்கான பரிந்துரைகளையும் எடுத்துக் கூறுவதாக இவ்வாய்வு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து அத்தியாயங்கள் உருவாக்கப்பட்டு இவ்வாய்வு நகர்ந்து கொண்டு செல்கின்றது. |
en_US |