Abstract:
பெண்விடுதலை என்ற தொடர் இன்று பலராலும் எமது சமூகத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் ஆணாதிக்க சமூகத்தால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரு சமூகம் சார்ந்த முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள இத்தருணத்தில் "மலையகப் பெண்கள் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள். நுவரெலிய பிரதேச செயலகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு பெண்ணிய மெய்யியல் ஆய்வு" எனும் தலைப்பை தன்னகத்தே சுமந்துள்ளது இவ்வாய்வு, சிறப்புத் தேவைகள் என உலக சுகாதார நிறுவனத்தால் குறிக்கப்பட்ட கர்ப்ப காலம் குறுகிய காலமானது மாறுபடும் பருவமாகும். குறிப்பாக பல்வேறு பிரச்சினைகள் பெருந்தோட்ட மத்தியில் தீவிரமானதாகக் காணப்படுகிறது. இலங்கையில் மக்கள் தொகை. தோட்டத் துறையில் 54% தொழிலாளர்கள் பெண்கள் என்றாலும் அவர்களின் ஆரோக்கியம் இன்னும் பிரச்சனையாகவே உள்ளது. குறிப்பாக தோட்டக் கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வறுமை, அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமை, ஊட்டச்சத்து குறைபாடு, விழிப்புணர்வு இல்லாமை மற்றும் பணிச்சூழல் பிரச்சனைகள் ஆகியவை அடங்கும்.
ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியானது. நுவரெலியா பிரதேச செயலகத்தை அடிப்படையாக கொண்டு தெரிவுசெய்யப்பட்ட கிராம சேவகப் பிரிவுகளை அடிப்படையாக கொண்டு ஒரு கலப்பு முறையைப் பயன்படுத்தி நடத்தப்பட்டது. வினாக்கொத்து, கட்டமைக்கப்பட்ட நேர்காணல்கள். கவனம் குழு விவாதங்கள். ஆய்வுக்கான முதன்மை தரவு சேகரிப்பு கருவிகள் மற்றும் ஆய்வுக்கான இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு கருவிகள் பெறப்பட்டன. தோட்ட வருடாந்த அறிக்கைகள் மற்றும் இணையத்தளங்களிலிருந்து. சேகரிக்கப்பட்ட தரவு புள்ளிவிவர விளக்க பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வு முடிவுகள் பெறப்பட்டன.
நோக்க பூர்த்திக்கேற்ப பொருத்தமான அளவைசார் மற்றும் பண்புசார் நுட்பமுறைகளின்
மூலமாக பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தரவு பகுப்பாய்விற்காக Excel, GIS
போன்ற மென்பொதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கிடைக்கப்பெற்ற முடிவுகள்
வரைபுகள், அட்டவணைகள், படங்கள், விபரிப்புகள், விளக்கங்கள் போன்றவற்றினூடாக
எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவ்வாய்வின் இறுதியில் மலையகப் பெண்கள் கர்ப்ப
காலத்தில் எதிர்கொள்ளும் உட்கட்டமைப்பு ரீதியாக, சுகாதார ரீதியாக, பொருளாதார
ரீதியாக, உடல் ரீதியாக, உள ரீதியாக, சமூக ரீதியாக பிரச்சினைகளை அறிய
முடிகின்றது. இப்பிரச்சினைகள் அதிகரிப்பதற்கான காரணங்களையும், அவற்றை
குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் அறிய முடிகின்றது. பொதுவாக மலையகப்
பெண்கள் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான காரணங்களாக
கல்வியறிவின்மை, பயம், கட்டுப்பாடு, கலாசாரம், ஆணாதிக்கம், அரசியல், சமூக,
பொருளாதாரம் குறித்த தெளிவின்மை, வறுமை, ஆண்கள் மதுபழக்கத்திற்கு அடிமையாகிருத்தல் போன்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் பெண்களுக்கான விழிப்புணர்வு கல்வியை வழங்குதல்,மலையகத்தில் மாதர் சங்கங்களை உருவாக்கி பெண்களை வழுப்படுத்தல், தோட்டப்புறங்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தல், ஆண் மேற்பார்வையாளர்களை தவிர்த்து பெண் மேற்பார்வையாளர்களுக்கு ஊக்கமளித்தல், வேலைத்தளங்களில் மலையக கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக அறிமுகம், இலக்கிய மீளாய்வு, ஆய்வுப் பிரதேசத்தின் பின்னணி மற்றும் ஆய்வு முறையியல், தரவு சேகரிப்பும் தரவு பகுப்பாய்வும், முடிவுரையும் பரிந்துரைகளும் என ஐந்து வகையான அத்தியாயப் பிரிப்புகளை கொண்டதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.