Abstract:
மருத்துவ தொழில்நுட்பத்தில் காணப்படும் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக செயற்கை முறை கருத்தரிப்பு முறையான பரிசோதனை குழாய் குழந்தை முறை காணப்படுகின்றது. இது ஆண்கள், பெண்கள் குழந்தைகள், குடும்பம், சமூகம் என அனைவரையும் பல விமர்சனங்களுக்கும் விளைவுகளுக்கும் பாதிப்புகளுக்கும் இட்டுச் செல்ல வழி வகுக்கின்றது. இதன் அடிப்படையில் இவற்றை குறிப்பிட்டு காட்டும் வகையில் பரிசோதனை குழாய் குழந்தை முறையினால் ஏற்படும் ஒழுக்கம் மீறுகைகள் எனும் தலைப்பிலான இவ்வாய்வு அமைந்து காணப்படுகின்றது.
அத்துடன், இவ்வாய்வானது நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வு கட்டுரைகள், இணையதளங்கள் என்பவற்றை பயன்படுத்தி அவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக அமைகிறது. இப்பபரிசோதனை குழாய் குழந்தை முறையில் குழந்தைகளை பெற்றுக் கொள்வது பல்வேறு வகையான ஒழுக்க மீறுகைகளை ஏற்படுத்துகிறது. எனவேதான், ஒழுக்கவியல் அடிப்படையில் பிரயோக ஒழுக்கவியல் ரீதியாக இக்கருத்தரிப்பு முறையில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள் ஆய்வாளனால் இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது. அவ்வாறான ஒழுக்க மீறுகைகளாக இரண்டு பெற்றோர், மூன்று பெற்றோர், எனும் பிரச்சினை இச்செயற்பாடு வியாபாரமாக பார்க்கப்படுகின்றமை, இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள், விளைவுகள், பாலியல் தொடர்புகள் என்பன முக்கிய இடம்பெறுகின்றன.
எனவே, இத்தகைய ஒழுக்கவியல் பிரச்சினைகள் எவ்வாறான முறையில் ஏற்படுகின்றன என்பதை அடையாளப்படுத்துவதோடு, அவற்றுக்கான பரிந்துரைகளையும் எடுத்துக் கூறுவதாக இவ்வாய்வு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து அத்தியாயங்கள் உருவாக்கப்பட்டு இவ்வாய்வு நகர்ந்து கொண்டு செல்கின்றது.