தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பதுளை மாவட்டம் ஊவபரணகம பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட ஹியூகோலண்ட் தோட்டம் கிராம செயலகப் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மெய்யியல் ஆய்வு 2023

Show simple item record

dc.contributor.author தனதர்ஷணி, புஸ்பராஜ்
dc.date.accessioned 2024-09-30T07:34:53Z
dc.date.available 2024-09-30T07:34:53Z
dc.date.issued 2023
dc.identifier.citation FAC 1398 en_US
dc.identifier.uri http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15789
dc.description.abstract இன்றைய காலகட்டத்தில் சக்திவாய்ந்த ஊடகம் என்றால் அது திரைப்படங்கள்தான் என கூறலாம். அந்தளவிற்கு உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு தரப்பினர்களினாலும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்த பிரபல்யமடைந்த ஊடகத்தில் தமிழ் திரைப்படங்களும் தனக்கென ஒரு உன்னத நிலையினைப் பெற்றுக் காணப்படுகின்றது. இவ்வாறான பெருமைபெற்ற தென்னிந்தியத் தமிழ்திரைப்படங்கள் தமிழ் மக்களிடம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. அத்துடன் சிறுவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் நாகரீகமாக மாறிவிட்டது. முதியவர்கள் முதல் பாடசாலை செல்லும் சிறுவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒருதுறையாக திரைப்படங்கள் காணப்படுகின்றது. இதிகாச புராண மற்றும் பக்தி கதைகளை மக்கள் எளிமையாக விளங்கிக்கொள்ளக் கூடியவாறும் தத்துவரூபமாகவும் பொதுவாக சகல குடும்பங்களினாலும் இரசிக்கப்பட்டு வந்த அன்றைய தமிழ்த்திரைப்படங்கள் இன்றைய காலகட்டத்தில் அதன் மகத்தான நிலையினை படிப்படியாக குறைத்துக்கொண்டு வருகின்றது. திரைப்படங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாத மற்றும் சில வேளைகளில் பொருந்துகின்ற பல கற்பனை கதைகளையும் உள்ளடக்கி மூன்று மணித்தியாலங்களுக்குள் சகலரையும் கவருகின்ற ஒரு விடயமாக விளங்குகின்றது. பெரும்பாலான திரைப்படங்கள் கற்பனைகளாகவே அமைகின்றன. இதனை திரைப்பட இயக்குணர்களே ஆரம்பத்தில் கூறுவார்கள். இவ்வாறு தொடரப் போகும் கதையானது கற்பனையாக அமைந்தாலும் அதனை யாரும் கற்பனையாக நினைக்காமல் உண்மைபோல் அனைவரும் அத்திரைப்படத்தின உள்ளையே வாழ்ந்து கொண்டு அதில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொண்டு நடைமுறை வாழ்க்கையுடன் கொண்டு செல்கின்றார்கள். இவ்வாறு கற்பனைகளாக திரைப்படங்கள் அமைந்தாலும் அதனை நாகரீகம் எனும் போர்வையில் கதாநாயகர்களை தமது முன்மாதிரிகளாக கொண்டு அவர்களது நடை உடை பாவனையினாலும் அவர்கள் பேசும் வசனங்களினாலும் கவரப்பட்டு கதாநாயகர்களைப் போலவே தாமும் மாற முயற்சிக்கின்றனர். இவ்வாறு திரைப்படங்கள் கற்பனைகளாக அமைந்தாலும் சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக செல்வாக்குப் பெற்று திகழ்கின்றது. ஆனால் இன்றைய தமிழ்த்திரைப்படங்கள் இளம்சமூகத்தினரை ஏமாற்றும் ஊடகமாக மாறிவிட்டது. இதில் வருகின்ற காட்சிகள் அனைத்தும் கற்பனையே என்று ஆரம்பிப்பபோடு மது அருந்துதல் மற்றும் புகைத்தல் உடல்நடத்திற்கு கேடு என ஆரம்பிக்கும் திரைப்படங்கள் உள்ளே மது அருந்துதல் மற்றும் புகைத்தல் காட்சிகள் நிரம்பி காணப்படுகின்றன. கற்பனை காட்சிகள் மூலம் எவ்வாறு திரைப்படங்கள் வெற்றிகரமானதாக அமைகின்றதோ அவ்வாறான கற்பனை கதைகள் மூலமாக இளம் சமூதாயத்திற்கும் இதுதான் நாகரீகம் என்ற மனப்பாங்கினையும் இந்த திரைப்படங்கள் உருவாக்கிவிடுகின்றது என்று கூறினால் அது மிகையல்ல. இவ்வாறு தென்னிந்திய தமிழ்த்திரைப்படங்களின் செல்வாக்கு எல்லா வயதினரிடமும் காணப்படுகின்றது. இருப்பினும் சிறுவர்களிடம் இதனுடைய தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது திரைப்படங்களின் மூலம் வெளியுலகு பற்றி அறிந்து கொள்கின்றனர். இதனால் சிறுவர்களிடம் திரைப்படங்களினால் ஏற்பட்டுள்ள நன்மைகளை விட பாதிப்புக்களே அதிகம் காணப்படுகின்றது. அந்தவகையில் "தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பதுளை மாவட்டம் ஊவபரணகம பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட ஹியூகோலண்ட் தோட்டம் கிராம செயலகப் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மெய்யியல் ஆய்வு 2023" எனும் தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் இவ்வாய்வானது ஊவபரணகம பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட ஹியூகோலண்ட் தோட்டம் கிராம செயலகப் பிரிவில் வாழும் சிறுவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. இதனது பிரதான நோக்கமாக தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களினால் சிறுவர்களிடம் ஏற்பட்டுள்ள ஒழுக்க, சமூக, பொருளாதார, உளவியல், மொழியியல், உடலியல், கலாச்சார பாதிப்புக்களை கண்டறிவதோடு அதற்கான பரிந்துரைகளையும் முன்வைப்பதாக அமைந்துள்ளது. இதனடிப்படையில் இவ்வாய்வானது ஆறு அத்தியாயங்களைக் கொண்டு காணப்படுகின்றது. இதன்படி முதலாம் அத்தியாயம் ஆய்வுத்திட்ட முன்மொழிவாக அமைந்துள்ளது. இதனுள் ஆய்வு அறிமுகம், ஆய்வுப் பிரச்சினை, ஆய்வின் முக்கியத்துவம், ஆய்வின் நோக்கம். ஆய்வுக் கருதுகோள், ஆய்வு வினாக்கள், ஆய்வு முறையியல் மற்றும் இலக்கிய மீளாய்வு, அத்தியாய ஒழுங்கு போன்றன அமைந்துள்ளன. இவ்வாய்வின் இரண்டாம் அத்தியாயம் இலக்கிய மீளாய்வாக காணப்படுகின்றது. இவ்வாய்வுடன் தொடர்புடைய ஏற்கனவே வெளிவந்த புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றவற்றினை ஆய்வுடன் தொடர்புபடுத்தி மீளாய்வு செய்வதனை குறிக்கின்றது. இவ்வாய்வின் மூன்றாம் அத்தியாயமானது ஆய்வுமுறையியலையும் வெகுஜன ஊடகம் பற்றியதாகவும் அமைந்துள்ளது. இவ்வாய்வின் நான்காவது அத்தியாயமானது ஆய்வு பிரதேசம், மாதிரிதெரிவு முறைகளைக் கொண்டுள்ளதுடன், அத்தியாயம் ஐந்து ஆய்வுப் பிரச்சினைக்கான மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளினை பகுப்பாய்விற்குட்படுத்தி பிரச்சினைகளை இனங்காண்பதாகும். ஆறாம் அத்தியாயத்தில் பகுப்பாய்வு மூலம் பெறப்பட்ட பிரச்சினைகளினைக் கூறுவதுடன் அப்பிரச்சினைக்கு ஆய்வாளனால் முன்வைகப்படும் பரிந்துரைகளையும் இவ்வாய்வு தொடர்பான முடிவினையும் கொண்டுள்ளது. எனவே ஆய்வுச்செயற்பாட்டில் முக்கியமானதாக விளங்கும் ஆய்வுச் சுருக்கமானது ஆய்வறிக்கை தொடர்பாக முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு அவசியமானதொன்றாக காணப்படுகின்றது en_US
dc.language.iso other en_US
dc.publisher Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka en_US
dc.subject தென்னிந்திய திரைப்படங்கள் en_US
dc.subject சிறுவர்கள் en_US
dc.subject தாக்கங்கள் en_US
dc.subject பதுளை மாவட்டம் en_US
dc.subject ஊவபரணகம en_US
dc.subject ஹியூகோலண்ட் தோட்டம் en_US
dc.title தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பதுளை மாவட்டம் ஊவபரணகம பிரதேச செயலகப் பிரிவிற்குற்பட்ட ஹியூகோலண்ட் தோட்டம் கிராம செயலகப் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மெய்யியல் ஆய்வு 2023 en_US
dc.type Thesis en_US


Files in this item

This item appears in the following Collection(s)

Show simple item record

Search


Browse

My Account