Abstract:
"வெளிநாட்டுக் கடனின் மீதான நாணயமாற்று வீத தளம்பலின் தாக்கம்" எனும் தலைப்பிலான இவ் ஆய்வானது. இலங்கையின் இன்றைய முன்னணி சவால், வறுமைக் குறைப்புக்கான நிலையான மற்றும் பக்கச்சார்பற்ற வளர்ச்சியை நோக்கி செல்லும் பாதையைத் தொடர அதன் கடன் சுமையைக் குறைப்பதாகும். அந்த வகையில் வெளிநாட்டு கடனை சரியான முறையில் முகாமை செய்வதன் மூலம் வெளிநாட்டு கடன் அதிகரிப்பினால் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக விளைவுகளை குறைத்துக்கொள்ள முடியும். இலங்கையின் சூழலில் நாணய மாற்று விகிதம் மற்றும் வெளிநாட்டுக் கடன் தொடர்பை ஆராய்வதன் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப 1990 தொடக்கம் 2021 காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட காலத்தொடர் தரவுகளை கொண்டு ARDL அனுகுமுறையில் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுத்தபட்டுள்ளது. வழுச்சரிப்படுத்தல் மாதிரியுரு, மற்றும் மாறிகளுக்கு இடையிலான நீண்டகால சமநிலை முடிவின் படி வெளிநாட்டுபடுகடன் மீது நாணயமாற்று வீகித தளம்பல் புள்ளிவிபர ரீதியாக பொருளுள்ளுள்ள வகையில் நீண்ட காலத்தில் எவ்வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என்ற முடிவினையே பெற்றுள்ளது. குறுங்காலத்தில் நிகழ்கால வெளிநாட்டு கடன் மீது நிகழ்கால நாணயமாற்று வீத தளம்பல் நேர்கணிய தொடர்பை கொண்டுள்ளது. மாதிரி சிறந்தது என நிறுப்பிக்க செய்யப்பட்ட சோனைகளின் படி சிறந்த மாதிரியுரு என முடிவினை பெறப்பட்டதோடு Granger Causality கணிப்பிட ஒருவழித்தன்மை வாய்ந்தது, 5 சதவீத பொருண்மை மட்டத்தில் நாணயமாற்று வீகித தளம்பல் வெளிநாட்டுபடு கடனில் காரணகாரிய தொடர்பினை கொண்டிருக்கின்றது. ஆகவே வெளிநாட்டு படுகடன் முகாமைக்கு குறுங்காலத்தில் நாணயமாற்று வீதத்தினை சீராக்க. காரணியாக கருதமுடியும். வலுவான பொருளாதாரமானது நீண்டகாலத்தில் நாணயமாற்று வீதமானது பொதுகடனில் எவ்வித தாக்கத்தையும் கொண்டிருக்கமையை சாதகமான விளைவாக கருதுகின்றது. எதிர்கால ஆய்வுகள் வேறுப்பட்ட மாறிகளை கொண்டு வேறுபட்ட பகுப்பாய்வு முறைகளை கொண்டு ஆராய முன்மொழியபடுகின்றது.