dc.contributor.author |
ஜெயகாந்தி, மோஹன்ராஜ் |
|
dc.date.accessioned |
2024-09-30T09:15:00Z |
|
dc.date.available |
2024-09-30T09:15:00Z |
|
dc.date.issued |
2023 |
|
dc.identifier.citation |
FAC 1414 |
en_US |
dc.identifier.uri |
http://www.digital.lib.esn.ac.lk//handle/1234/15805 |
|
dc.description.abstract |
"வேலைவாய்ப்பின் மீதான சுற்றுலாத்துறையின் தாக்கம்" (இலங்கை குறித்த செயலறிவு ரீதியான ஆய்வு) எனும் தலைப்பிலான இவ் ஆய்வின் பிரதான நோக்கமான இலங்கையின் வேலைவாய்ப்பின் மீது சுற்றுலாத்துறையானது குறுங்கால தொடர்பினை கொண்டுள்ளதா அல்லது நீண்டகால தொடர்பினை கொண்டுள்ளதா என்பதை 1990 தொடக்கம் 2022 வரையில் சேகரிக்கப்பட்ட காலத்தொடர் தரவுகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுத்தி ஆராயப்பட்டுள்ளது. இவ்வாய்வின் நிலைத்த தன்மையை அறிய அலகு மூலச்சோதனையும், ஆய்வின் பிரதான மற்றும் துணை நோக்கங்களை அடைவதற்கான பொருளியலளவை நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு வழுச்சரிப்படுத்தல் மாதிரியுரு (Vector Error Correction Model), மற்றும் மாறிகளுக்கு இடையிலான நீண்டகால சமநிலைத் தொடர்பினை លក់ (Johenson Cointegration Test) அணுகுமுறை மற்றும் மாறிகளுக்கு இடையிலான தொடர்பானது ஒருவழித்தன்மை வாய்ந்ததா? அல்லது இருவழித்தன்மை கொண்டனவையா என்பதைக் கணிப்பிட Granger Causality போன்ற நுட்பங்களையும் பயன்படுத்தி ஆய்வானது பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இவ் ஆய்வின் முடிவின் படி, வேலைவாய்ப்பின் மீது சாரா மாறிகளான சுற்றுலாப்பயணிகளின் வருகை, வெளிநாட்டு நேரடி முதலீடு, பொருளாதார வளர்ச்சி வீதம் மற்றும் பணவீக்கம் ஆகியன குறுங்காலத்தில் புள்ளிவிபர ரீதியாக எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை. ஆனால் வேலைவாய்ப்பின் மீது சாரா மாறிகளான சுற்றுலாப்பயணிகளின் வருகை, வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆகியன நீண்டகாலத்தில் புள்ளிவிபர ரீதியாக தாக்கம் செலுத்துகின்றன. மேலும் நீண்டகாலத்தில் 5% பொருளுண்மை மட்டத்தில் வேலைவாய்ப்பானது சுற்றுலா பயணிகளின் வருகை, பொருளாதார வளர்ச்சி வீதம் மற்றும் பணவீக்கம் என்பவற்றோடு நேர்கணிய தாக்கத்தையும் வெளிநாட்டு நேரடி முதலீட்டுடன் எதிர்கணிய தாக்கத்தையும் கொண்டுள்ளது. அதாவது வெளிநாட்டு நேரடி முதலீடானது புள்ளிவிபர ரீதியாக பொருளுள்ள வகையில் நீண்ட காலத்தில் எவ்வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என்ற முடிவினையே பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பின் மீது ஏனைய சாரா மாறிகள் காரணகாரிய தொடர்பினை கொண்டிருக்கவில்லை. |
en_US |
dc.language.iso |
other |
en_US |
dc.publisher |
Faculty of Arts & Culture Eastern University, Sri Lanka |
en_US |
dc.subject |
இலங்கையின் மொத்த வேலைவாய்ப்பு |
en_US |
dc.subject |
சுற்றுலாப்பயணிகளின் வருகை |
en_US |
dc.subject |
வெளிநாட்டு நேரடி முதலீடு |
en_US |
dc.subject |
பொருளாதார வளர்ச்சி வீதம் |
en_US |
dc.subject |
பணவீக்கம் |
en_US |
dc.subject |
PP அலகுமூலச்சோதனை |
en_US |
dc.subject |
ஜொஹன்சன் கூட்டு ஒருங்கிணைவு சோதனை |
en_US |
dc.title |
வேலைவாய்ப்பின் மீதான சுற்றுலாத்துறையின் தாக்கம் (இலங்கை குறித்த செயலறிவு ரீதியான ஆய்வு, 1990- 2022) |
en_US |
dc.type |
Thesis |
en_US |