dc.description.abstract |
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சனத்தொகை மாற்றமானது தாக்கம் செலுத்தி வருகின்றது. கால மாற்றத்திற்கேற்ப இதன் மாற்றமும் மாறுவது இயல்பானதாகும். இதனடிப்படையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் சனத்தொகை வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை கண்டறிவதே ஆய்வின் நோக்கமாகும். 1990-2022 வரையான வருடாந்த காலத்தொடர் தரவுகளை பயன்படுத்தி இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் சனத்தொகை வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை ஆராயும் இவ் ஆய்வானது, சேகரிக்கப்பட்ட தரவுகளை E Views 10 கணனி மென்பொருளை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவுகள் பெறப்பட்டன. இங்கு சார்ந்த மாறியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியும், பிரதான சாரா மாறியாக சனத்தொகை வளர்ச்சி வீதமும், ஏனைய துணை சாரா மாறிகளாக மொத்த உள்நாட்டு சேமிப்பு, மொத்த சுகாதார செலவு மற்றும் வேலையின்மை என்பவற்றை கொண்டு ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வில் ARDL மாதிரியுரு, ECM மாதிரியுரு, கிரெஞ்சர் காரண காரிய சோதனை போன்ற பொருளியலளவை நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்படி, ஆய்வின் முடிவாக சனத்தொகை வளர்ச்சி வீதமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மீது புள்ளிவிபர ரீதியாக பொருளுள்ள வகையில் நீண்டகாலத்திலும், குறுங்காலத்திலும் நேர்கணிய தாக்கத்தை செலுத்துகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு சேமிப்பு நீண்டகாலத்திலும், குறுங்காலத்திலும் நேர்கணிய தாக்கத்தை செலுத்துகின்றது. மொத்த சுகாதார செலவானது நீண்டகாலத்தில் எதிர்கணிய தாக்கத்தையும் குறுங்காலத்தில் எவ்வித தாக்கத்தையும் செலுத்தவில்லை. வேலையின்மையானது நீண்டகாலத்திலும் குறுங்காலத்திலும் எதிர்கணிய தாக்கத்தை செலுத்துகின்றது. இலங்கையில் சனத்தொகை வளர்ச்சி குறைவடைகின்ற அதேநேரம் பொருளாதார வளர்ச்சியும் குறைவடைவதனை ஆய்வானது சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாறு சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் ஏற்படும் வீழ்ச்சியானது பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக அமைகின்றது. |
en_US |