dc.description.abstract |
பல்கலைக்கழகத்தில் சிறப்புக் கற்கையினை மேற்கொள்கின்ற மாணவர்கள் கலைமாணிப் பட்டத்தின் ஓர் அம்சமாக ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தல் அவசியமானதாகும். இதன் அடிப்படையில் கிழக்கு பல்கலைகழகத்தின் இந்து நாகரிகத்துறையில் சிறப்புக் கற்கையை பூர்த்தி செய்யும் முகமாக குசலான மலைக் குமரன் கோயில் வரலாறும் வழிபாடும் - ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் இவ் ஆய்வினை மேற்கொண்டுள்ளேன். ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களில் கரடியனாறு பிரதேசம் தனித்துவம் வாய்ந்தது. இங்கு எல்லா தெய்வங்களையும் முதன்மைப்படுத்திய ஆலயங்கள் காணப்படுகின்றது. அவற்றுள் கரடியனாறு குசலான மலைக்குமரன் ஆலயம் குறிப்பிடத்தக்கது. முருகனை முதன்மைப்படுத்திய இவ் ஆய்வு ஐந்து அத்தியாயமாகக் காணப்படுகின்றது. முதலாவது அத்தியாயம் ஆய்வின் அறிமுகமாக அமைந்துள்ளது. ஆய்வின் தலைப்பு, ஆய்வுப் பிரதேசம், ஆய்வின் பிரச்சினை,ஆய்வின் நோக்கங்கள், ஆய்வின் முக்கியத்துவம், ஆய்வின் மூலங்கள். ஆய்வுப் பகுப்பு, ஆய்வின் பயன், இலக்கிய மீளாய்வு என்பன விளக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அத்தியாயம் கரடியனாறு குசலானமலைக் குமரன் ஆலயத்தின் வரலாறு, கல்வெட்டுக்கள், குகைகள், கட்டட இடிபாடுகள், தொல்பொருள்கள் என்பன கூறப்பட்டுள்ளது. மூன்றாவது அத்தியாயம் முருக வழிபாடு, நிர்வாகம், கலை வளர்ச்சி பற்றி கூறப்பட்டுள்ளது. நான்காவது அத்தியாயம் வழிபாட்டு முறைகள், ஆலயத்துக்கும் சமூகத்துக்குமான தொடர்பு என்பன கூறப்பட்டுள்ளது. ஐந்தாவது அத்தியாயம் நிறைவுரையாக அமைந்துள்ளது. இவற்றுக்கு அடுத்து பின்னிணைப்புக்கள், ஆய்வு தொடர்பான படங்களும் உசாத்துணைகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் வரலாறு பற்றி நோக்குவதன் ஊடாக வழிபாட்டம்சங்களை எடுத்துக்காட்டுவதற்கான ஒரு முருக ஆதாரமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் ஆய்வின் மூலம் கரடியனாறு குசலான மலைக் குமரன் ஆலயத்தின் வழிபாட்டு முறைகள் வெளிக்காட்டப்படுதல், மக்களின் வழிபாட்டம்சங்கள், கலைகள் வெளிப்படுதல், ஆலயத்திற்கும் சமூகத்திற்குமான தொடர்பு வெளிப்படுதல் என்பன பெற்றுக் கொண்ட பயனாக காணப்படுகின்றது. ஆய்வு மூலங்களில் முதலாம் நிலைத் தரவுகளான கள் ஆய்வு பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், இணையத்தளங்கள் என்பன பயன்பட்டுள்ளன. இவ் ஆய்வு முறையியலில் விவரண ஆய்வு, வரலாற்று ஆய்வு, முருகியல் ஆய்வு என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ் ஆய்வு எதிரகாலத்தில் கரடியனாறு குசலானமலைக் குமரன் ஆலயம் பற்றி ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு உதவியாக அமையும் என நம்புகின்றேன். |
en_US |