Abstract:
மேற்கில்
கிரேக்கம், இலத்தீன் முதலான பழைய ஐரோப்பிய மொழிகளிலும்
ஆங்கிலத்திலும் ர்நசஅநநெரவiஉள என்ற சொல் பொருள் கோடல்
அல்லது பொருள்கோளியல் என்பதற்கு இணையாகப் பழங்காலம்
தொட்டே வழக்கிலிருந்து வருகிறது. பொருள்கோளியல் என்பதை
பொருள் விளக்கம் குறித்த கோட்பாடு (வுhநழசல ழக ஐவெநசிசநவயவழைn)
என்று அறிஞர்கள் கூறுவார்கள். கூடுதலாக, ஒரு நூலின் அல்லது
பனுவலின் பொருண்மையைப் புரிந்து கொள்வதற்கான முறையியலை
அது வழங்குகிறது என்றும் கொள்ளலாம். மொழி, இலக்கணம்,
தருக்கவியல், கலை, இலக்கியம் ஆகியவற்றின் அடிப்படைகளைத்
தன்னில் கொண்ட துறையாகவும் பொருள்கோளியலைச் சொல்ல
முடியும் .