Abstract:
இன்றைய உலகில் உற்பத்தி வியாபார நடவடிக்கைகள் நுகர்வோர், சந்தைப்படுத்தல் செயற்பாடுகளுடன் இணைந்ததாகவே காணப்படுகின்றன. ஒரு பொருளுக்கான நுகர்வில் அதிகரிப்பை எற்படுத்த வேண்டுமாயின் நுகர்வில் செல்வாக்கு செலுத்துகின்ற காரணிகளை கண்டறிந்து அவற்றில் சாதகமான மாற்றங்களை ஏற்படத்துவதன்மூலம் அதிகரிப்பை எற்படுத்தலாம். இவ் ஆய்வானது "மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயளாளர் பிரிவுக்குட்பட்ட நெஸ்பிறே மென்பான நுகர்வோர் கொள்வனவு நடத்தை பற்றியதாகும்" இவ் ஆய்விற்காக நுகர்வோர் நடத்தையில் செல்வாக்கு செலுத்துகின்ற மாறிகளான சந்தைப்படுத்தல் கலவை, கொள்வனவாளர் பண்பு என்னும் மாறிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் செல்வாக்கு நிலை ஆராயப்பட்டுள்ளது.இதனை ஆராயும் வகையில் இவ் ஆய்வு 7 அத்தியாயங்களை உள்ளடக்கி காணப்படகின்றது. மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயளாளர் பிரிவுக்குட்பட்ட 21 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் மக்களின் விதத்தின் அடிப்படையில் 100 நெஸ்பிறே கொள்வனவாளர்களிடம் வினாக்கொத்து வளங்கியதன் மூலம் தரவு சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட தரவுகள் SPSS மென்பொருளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டு நுகர்வோர் கொள்வனவு நடத்தையில் செல்வாக்குச்செலுத்துகின்ற மாறிகளின் செல்வாக்கு நிலை அறியப்பட்டது. நெஸ்பிறே மென்பானம் பாவனை தொடர்பாக நுகர்வோரின் கொள்வனவு நடத்தையினை ஆய்வு செய்ததன் மூலம் மேல் குறிப்பிட்ட மாறிகள் நடுத்தர அளவு செல்வாக்கு நிலையை செலுத்துகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இதன் மூலம் நுகர்வோர் தேவைப்பாடு, பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை தீர்க்கும் முகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகத்தர்களுக்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவணை செய்தல்