dc.description.abstract |
மட்டக்களப்பு மாவட்டத்தின் "கோறளைப்பற்று (வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் காலநடை உற்பத்தியாளர்களின் உற்பத்தியை தீர்மானிக்கும் காரணிகள்" எனும் தலைப்பில் இல்லாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு கால்நடை உற்பத்திக்கான வளங்கள் காணப்படுகின்ற போதிலும் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் இப்பிரதேசத்தின் கால்நடை உற்பத்தி குறைந்ததாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் இப்பிரதேச கால்நடை உற்பத்தியில் காரணிகள் எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றன என்பதை ஆய்வு செய்வதாக இவ்வாய்வு காணப்படுகின்றது இவ்வாய்வின் முக்கிய தோக்கங்களாக ஆய்வு பிரதேசத்தின் கால்நடை உற்பத்தியின் போக்கினை அறிந்து கொள்ளல், அதனை மேம்படுத்துவதில் இப்பிரதேச கால்நடை உத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடையாளம் காணல் அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளுக்கான சிறந்த தீர்வினை முன்வைத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம். இவ்லாயவின் எண்ணக்கருவாக்கமானது உயர்வான கால்நடை உற்பத்தியினை அடையும் வகையில் கால்நடை பராமரிப்பு முறை, கால்நடைக்கான தீவனம், கால்நடை உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு, காலநடை உற்பத்திக்கு வழங்கப்படும் மானியம், கால்நடை உற்பத்தியில் காலநிலை மாற்றம், கால்நடை உற்பத்திக்கு செய்யப்படும் காப்புறுதி, கால்நடை செயற்கை சினைப்படுத்தல் கால்நடை தொடர்பான சட்டம், மற்றும் கால்நடை உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் கால்நடை இனங்கள் போன்ற காரணிகளைக் குறிப்பிடலாம். இவ்வாய்வுக்கான தரவு சேகரிப்பில் முதலாந்தர தரவானது கள ஆய்வின் போது வினாக்கொத்துக்களை வழங்கி பெறப்பட்டது. இரண்டாம் தர தரவுகளானது ஆய்வுடன் தொடர்புடைய நூல்கள், கால்நடை உற்பத்தி சார்ந்த தகவல்களை வழங்குகின்ற நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் முன்னய கால்நடை உற்பத்தி தொடர்பான ஆய்வுகள் மற்றும் சஞ்சிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்டது. மேலும் இப்பிரதேச செயலக பிரிவில் கால்நடை உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்களாக 965 பேர் காணப்படுகின்றனர். இவற்றுள் 97 உற்பத்தியாளர்கள் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் மூலம் தரவுகள் நிரட்டப்பட்டன. இங்கு வினாக்கொத்துக்களில் வழங்கப்பட்ட வினாக்களுக்கு ஐந்து கூற்றுக்களின் முறையில் விடைகள் வழங்கப்பட்டு அதில் சரியானதற்கு பதிலளிக்கும் முறையினை பயன்படுத்தி தரவுப்பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு தரவுப்பகுப்பாய்வின் அடிப்பயிைல் தீவனம், கால்நடை உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு, கால்நடை உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் காலநிலை மாற்றம், கால்நடை உற்பத்திக்கு செய்யப்படும் காப்பீட்டுத்திட்டம், கால்நடை சம்பந்தமான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் சட்டம் மற்றும் உற்பத்தியில் ஈடுபடுத்தும் கால்நடை இனங்கள் ஆகியன கூடுதலாக பிரச்சனைகளாக காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்லாறு அடையாளம் காணப்பட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வினை அடையும் வகையில் கால்நடை உற்பத்தியுடன தொடர்புபட்ட அரச திணைக்களங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், நிதி நிறுவனங்கள், கால்நடை மற்றும் விவசாய அமைச்சு மேலும் ஏனைய உதவி வழங்கும் நிறுவனங்கள் இவற்றின் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் இப்பிரதேச கால்நடை உற்பத்தியாளர்களின் உற்பத்தியினை எதிர்காலத்தில் மேம்படுத்த முடியும். |
en_US |