dc.description.abstract |
சிறுவர் இல்லங்களில் சிறுவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் மிக முக்கிய பகுதியாகும். இதனடிப்படையில் சிறுவர் இல்லங்களின் முகாமைத்து செயற்திறனானது சிறுவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் விளையாட்டு, சமய கலாச்சார சமூக ஆற்றுப்படுத்தல் எந்தளவு செயற்திறன் மிக்கவையாக காணப்படுகின்றது என்பதனை ஆய்வு செய்வதன் மூலமும் சிறுவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமும் சிறுவர் இல்லங்களில் வளர்ச்சியை ஏற்படுத்தமுடியும் எனவே அதற்கு இவ் ஆய்வானது இன்றியமையாததென்றாகும்.
சிறுவர் இல்லங்களின் செயற்பாட்டு முகாமைத்துவ செயற்திறன்களை அடிப்படை தேவைகள் வழங்கும் செயற்பாடுகள், கல்விசார் செயற்பாடுகள், விளையாட்டு தொடர்பான செயற்பாடுகள், சமயம் கலாச்சாரம் சார் செயற்பாடுகள், தொழிற் பயிற்சி தொடர்பான செயற்பாடுகள், சமூக ஆற்றுப்படுத்தல் தொடர்பான செயற்பாடுகள், பேன்ற 6 காரணிகள் தொடர்பாக அவற்றின் முகாமைத்துவ செயற்திறனை மதிப்பிடல் இவ்வாய்வின் நோக்கங்களாகும்.
இவ் நோக்கங்களின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 சிறுவர் இல்லங்களிலுள்ள 100 சிறுவர்களுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு பெறப்பட்ட முடிவுகள் தரவு பகுப்பாய்வு Statical Package for Social Science (SPSS19.0), Excel ஆகிய மென் பொருட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
பகுப்பாய்வு முடிவுகளின் படி அடிப்படை தேவைகள் வழங்கும் செயற்பாடுகள் தொடர்பான காரணி உயர் நிலை செயற்திறனை கொண்டதாகவும் ஏனைய காரணிகளான கல்விசார் செயற்பாடுகள். விளையாட்டு தொடர்பான செயற்பாடுகள். சமயம் கலாச்சாரம் சார் செயற்பாடுகள், தொழிற் பயிற்சி தொடர்பான செயற்பாடுகள், சமூக ஆற்றுப்படுத்தல் தொடர்பான செயற்பாடுகள் என்பன நடுத்தர செயற்திறனை கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இவ்வாய்வின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்களின் செயற்பாட்டு முகாமைத்துவ செயற்திறன் மிகவும் வினைத்திறனாக மாற்றுவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் கண்டறியப்பட்டு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டன |
en_US |