Abstract:
ஒரு நிறுவனத்தின் இலக்குகளினை அடைந்துகொள்வதற்கு ஊழியர்களின் செயற்திறனின் வினைத்திறன் மிகவும் முக்கியமானதாகவும், அதனை அபிவிருத்தி செய்வது நிறுவனத்தின் கடமையாகவும் காணப்படுகின்றது. அந்தவகையில் ஊழியர் செயற்திறன் மதிப்பீட்டு முறைகளின் பிரயோகங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் கடமையாற்றும் 100 ஊழியர்களிடம் வினாக்கொத்து வழங்கி சேகரிக்கப்பட்ட தரவுகள் SPSS மென்பொதிக்கு உட்படுத்தப்பட்டு விபரிப்பு புள்ளி விபரப் பகுப்பாய்வு மற்றும் இணைவுக் குணகப் பகுப்பாய்வு என்பன மேற்கொள்ளப்பட்டன. இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்குப் பிரதேசத்தில் காணப்படும் நிறுவனங்களில் ஊழியர் செயற்திறன் மதிப்பீட்டுத்திட்டத்தின் ஊழியர் செல்வாக்கு நடுத்தரநிலையிலும், மற்றும் முகாமைத்துவ செல்வாக்கு நடுத்தரநிலையிலும் காணப்பட்டதுடன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களிற்கு இடையிலான ஊழியர் செயற்திறன் மதிப்பீட்டு முறைகளின் பிரயோகங்கள் தொடர்பாக நடுத்தரநிலை காணப்படுவதாக முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.மேலும் செயற்திறன் மட்டத்தினை உயர்நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிமுறைகளும் இங்கு குறித்துக்காட்டப்பட்டுள்ளன