dc.description.abstract |
மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய நிழக்கு நாடுகளில் தொழில் புரிந்தவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டில் நிதி முகாமைத்துவத்தின் பங்களிப்பில். வாழ்க்கைத்தர வளர்ச்சி பொருளாதார ரீதியாக புள்ளிவிபரங்களில் புலப்படுவதனால், பொருளாதார பண்புசார் யதார்த்தைப் பற்றி விளங்கிக் கொள்வதற்கும், தொழிலாளர்களின் ஆற்றல்களின் போக்கினை அறிவதற்கும் மற்றும் சிறு தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்குமென வினைத்திறன் மிக்க தீர்மானங்கள் உருவாக்குவதற்கு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தொழில் வாய்ப்பிற்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியவர்களின் வாழ்க்கைத் மேம்பாட்டில் நிதி முகாமைத்துவத்தின் பங்களிப்பு எனும் தலைப்பில் மாதிரியாக தெரிவு செய்யப்பட்ட 100 பேரின் தரவு சேகரிப்புக்காக ஆய்வுக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளும் தகவல்களும் எண்ணக்கருவாக்க நடைமுறையாக்க அடிப்படையில் வாழ்க்கைத்தர காரணியான வருமானம், கல்வி, சுகாதாரம், சொத்துக்கள். குடியிருப்பு வசதிகள் மற்றும் நிதி முகாமைத்துவக் காரணியான நிதித்திட்டமிடல், சேமிப்பு, முதலீடு, செலவு முகாமைத்துவம் என்பவற்றைக் கொண்டு தகவல்களை அட்டவணைப்படுத்தல், பகுப்பாய்வு செய்தல் (சராசரி காணல், நூற்று வீதம் காணல்), வரைபுகள் மூலம் வெளிப்படுத்துவதுடன் புள்ளிவிபரவியலில் இணைவுக் குணகம், பிற்செலவுப் பகுப்பாய்வு, Anova a அட்டவணை, பிற்செலவுக் குணகம் போன்ற பகுப்பாய்வு நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட்டு தரவுப்பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து நாடு திருப்பியவர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டில் நிதி முகாமைத்துவத்துவத்தின் பங்களிப்பினை பூர்த்தி செய்ய குறிப்பிட்டவர்கள் புலம்பெயர்ந்தவர்கள் இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அரசாங்கம், அரச வெளிநாட்டுக் கொள்கைகள் என்பவற்றினூடாக மீளாய்வுக்குட்படுத்துவதனூடாக மேலும் சிறப்புற அமைக்கும் போது வாழ்க்கைத்தர நிதிமுகாமைத்துவம் உயர்வடையும் என்பதையும் முடிவுகளும் சிபாரிசுகளும் முன்வைக்கப்படுகின்றன |
en_US |