dc.description.abstract |
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊழியர்கள் எதிர்நோக்கும் தொழில் அழுத்தம் தொடர்பில், மனிதவள முகாமை அல்லது நிர்வாகிகளினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைவாகும். மேலும் அரச மற்றும் தனியார் துறையினை பொதுவாக நோக்குகையில் இங்கு வங்கித்துறை ஏற்றதாகக் காணப்படுகின்றது. அதன்படி வங்கிகளினை நோக்குகையில் அவை தமது சேவையினை நாள் முழுவதும் வழங்குவதற்காகவும் தமது பெயரினை விஸ்திரப்படுத்துவதற்காகவும் ஊழியர்களின் மீது பல்வேறு வகையான பணிச்சுமைகளினை சுமத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே இதனைக் கருத்திற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் தொழில் அழுத்தம் உள்ளதா எனக் கண்டறிந்து, அது தொடர்பில் தீர்வுகளை முன்வைப்பதற்கு இங்கு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில் ஆய்வின் நோக்கங்களாக, மட்டக்களப்பு மாவட்ட அரச மற்றும்
தனியார் வங்கிகளில் பணிபுரியும் முதல்நிலை வங்கி ஊழியர்களின் மத்தியில்
தொழில் அழுத்தம் காணப்படுகின்றதா மற்றும் தொழில் அழுத்தம் எந்தளவுள்ளது
என்பதனைக் கண்டறிந்து, அதற்கான காரணங்கள் மற்றும் தொழில் அழுத்தத்தினை
எவ்வாறு தீர்க்க முடியும் என்பதனைக் கண்டறிதல் என்பன காணப்படுகின்றன.
மேலும் இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபலியமான அரச வங்கியான
இலங்கை வங்கி மற்றும் தனியார் வங்கியான கொமர்சியல் வங்கி ஆகியவை
தெரிவு செய்யப்பட்டு தரவுகள் சேகரிப்பதற்காக,அங்கு பணிபுரியும் முதல்நிலை
வங்கி ஊழியர்களில் எழுமாறாக அரச வங்கி சார்பில் 60 ஊழியர்கள் மற்றும்
தனியார் வங்கி சார்பில் 60 ஊழியர்கள் மாதிரிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு,
வினாக்கொத்துக்கள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டு, SPSS மென்பொருள் ஊடாக
பகுப்பய்வு செய்யப்பட்டு, தொழில் அழுத்தம் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவினை அவதானிக்கையில், அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் முதல்நிலை ஊழியர்களின் தொழில் அழுத்தம் நடுத்தர நிலையில் காணப்படுகின்றமையினை வெளிப்படுத்துகின்றது. மேலும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் இடைப்பெறுமானத்தினைக் கொண்டு ஒப்பிடுகையில் அரச துறை ஊழியர்களினை விடவும் தனியார் துறை ஊழியர்களிடம் தொழில் அழுத்தம் அதிகமாகக் காணப்படுகின்றமை இவ் ஆய்வு மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. |
en_US |