dc.description.abstract |
இன்றைய சகாப்தம் தொழில்நுட்பம் மற்றும் மக்கள் நிர்வாகத்தால் ஆனது. நிறுவனங்களானது தங்களின் ஊழியர்களை வினைத்திறனாக கையாளும் பட்சத்திலேயே வணிகத்தில் வெற்றிபெற முடியும்.
நிறுவனங்கள் அதன் வஊழியர்களை திறம்பட ஊக்குவிக்கவும் நிர்வகிக்கவும் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றன. வங்கித் துறையும் அதற்கு விதிவிலக்கல்ல. இவ்வாறாக நிறுவனங்களானது தங்களின் இலக்குகளினை அடைந்துக்கொள்ள ஊழியர்களுக்கு பெரும் சுமையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றது. அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறார்கள், விடுமுறை நாட்களிலும் வங்கிச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறது. குறிப்பாக தற்காலத்தில் அனைத்து வங்கி ஊழியர்களும் தங்கள் வேலையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்றாக நிர்வகிக்க பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
அதற்கிணங்க "மட்டக்களப்பு பிரதேசத்தில் வங்கியில் தொழில் புரிவோரின் வேலை வாழ்க்கை சமநிலைக்கும் மனவெழுச்சிசார் நுண்ணறிவிற்கும் இடையிலான தொடர்பு" என்ற இவ்வாய்விற்காக மட்டக்களப்பு பிரதேசத்தில் காணப்படும் அரச மற்றும் தளியார் வங்கிகளில் தொழில் புரியும் 100 ஊழியர்களிடமிருந்து எளிய எழுமாற்று மாதிரி எடுப்பு முறை மூலம் வினாக்கொத்துக்களை பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்பட்டது.
முறை மூலம் வினாக்கொத்துக்களை பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்பட்டது.
இவ்வாய்வின் மூலம் மட்டக்களப்பு பிரதேசத்தில் வங்கித்தொழில் புரியும் ஊழியர்களின் மனவெழுச்சிசார் நுண்ணறிவு மட்டத்தினையும், வேலை வாழ்க்கை சமநிலை மட்டத்தினையும் இனங்காணப்பட்டதோடு, இதில் மனவெழுச்சிசார் நுண்ணறிவில் சுய ஊக்கப்படுத்தல், சுய விழிப்புணர்வு. சுயமுகாமை. சமூக விழிப்புணர்வு, சமூகத்திறன் போன்ற மாறிகளும் வேலை வாழ்க்கை சமநிலையில தொழிலில் குடும்பத்தின் தலையீடு, குடும்பத்தில் தொழிலின் தலையீடு போன்ற மாறிகளும் காணப்படுகின்றது. மனவெழுச்சிசார் நுண்ணறிவு என்ற சாராத மாறிக்கும் வேலை வாழ்க்கை சமநிலை என்ற சார்ந்த மாறிக்கும் இடையில் 69.99% வலுவான நேர்த்தாக்கத்தினை கொண்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதுடன், வங்கிக்கும் வங்கி ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்குமான பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன |
en_US |