dc.description.abstract |
தற்போது மாறிவரும் உலக மாற்றங்களுக்கேற்ப வாடிக்கையாளர்களும் மாறிக்கொண்டு வருகின்றனர். பாரம்பரிய சில்லறைக் கடைகளில் இருந்து தற்போது பல்பொருள் சிறப்புச் சந்தையை நோக்கி நகர்வடைகின்றனர். சிறப்புச் சந்தைகள் அதிகரிக்க அதிகரிக்க வாடிக்கையாளர்களின் பல்பொருள் சிறப்புச் சந்தையை நோக்கிய மாற்றம் அதிகரிக்கின்றது. இவ்வாறான நிலையில் பாரம்பரிய சில்லறைக் கடைகளிலிருந்து பல்பொருள் சிறப்புச் சந்தை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதனை நிர்ணயிக்கும் காரணிகளின் தாக்கத்தினை ஆராயும் முகமாகவே
இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சில்லறை வியாபாரிகளின் விற்பனையை அதிகரிப்பதற்கும் வாடிக்கையாளர் மாற்றத்தில் சந்தைப்படுத்தல் கலவையில் காணப்படும் மாறிகளான வியாபாரப் பொருட்கள், அமைவிடம், விலை,மேம்படுத்தல், பணியாளர்கள், நடைமுறை. இயற்பியல் சான்று எனும் காரணிகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கண்டறிந்து பொருத்தமான சிபாரிசுகளை முன்வைப்பதையும் நோக்காகக் கொண்டு காணப்படுகின்றது.
எமது பிரதேசத்தில் சுமார் 20 பல்பொருள் சிறப்புச் சந்தைகள் காணப்படுகிறது. இச்சந்தைக்கு வாடிக்கையாளர் செல்வது அதிகரித்துக் காணப்படுகிறது. இது ஏன் இவ்வாறு காணப்படுகிறது என்பதைக் கண்டறிவதற்காக கோறனைப் பற்று மேற்கு பிரதேசத்தில் காணப்படும் 08 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 100 வாடிக்கையாளர்கள் எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்துக்கள் வழங்கி அதன் மூலம் நிலைமை கண்டறியப்பட்டது.
பகுப்பாய்வின் அடிப்படையில் வாடிக்கையாளர் மாற்றத்திற்கான காரணிகளில் வியாபாரப் பொருட்கள், இடம், விலை, மேம்படுத்தல், பணியாளர்கள், நடைமுறை மற்றும் இயற்பியல் சான்று ஆகிய காரணிகள் அனைத்தும் தூண்டும் காரணியாக மாறுவதை அவதானிக்க முடிந்தது. இந்த வகையில் அதிகளவு தாக்கம் ஏற்படுத்தும் காரணியாக வியாபாரப் பொருட்கள் அதற்கு அடுத்த படியாக பணியாளர்களும் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
அதற்கமைவாக சில்லறை வியாபாரிகள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் விற்பனையை அதிகரிப்பதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெடுப்புக்கள் பற்றியும் பொருத்தமான சிபாரிசுகளையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கி இவ்வாய்வு காணப்படுகின்றது. |
en_US |