Abstract:
ஊழியர்களின் தொழில் திருப்தி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களது செயற்றிறனில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக பல ஆய்வாளர்களால் பல்வேறு நாடுகளில் பல்வேறுபட்ட துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. )Yuen et al, 2018 in Eeman, 2016(. لنومè amú Úg Ga வெளிக்கள உத்தியோகத்தர்களின் தொழில் திருப்தி மற்றும் நிறுவன பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களின் செயற்றிறனில் ஏற்படுத்தும் தாக்கத்தினை அறிந்து கொள்வதற்காக அங்கு கடமையாற்றும் 100 வெளிக்கள உத்தியோகத்தர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் வினாக்கொத்து மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களினை SPSS 22.0 மென்பொதியினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விபரிப்புப் புள்ளிவிபரவியல் ஆய்வில் தொழில் திருப்தி, நிறுவன பிரஜை நடத்தை மற்றும் ஊழியர் செயற்றிறன் என்பன உயர் மட்டத்தில் காணப்படுவதாக அடையாளங் காணப்பட்டது. மேலும் தொழில் திருப்தி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களின் செயற்றிறன் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான இணைவுக் குணகப் பகுப்பாய்வில் (Correlation Analysis) தொழில் திருபதி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன ஊழியர் செயற்றிறன் மீது நேர்கணியத் தொடர்பினைக் கொண்டதாகக் காட்டுகின்றது. மேலும் பிற்செலவு பகுப்பாய்வில் (Regression Analysis) தொழில் திருப்தி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களின் செயற்றிறனில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகக் காணப்படுவதாக அடையாளங்காணப்பட்டன. இதன் மூலம் ஊழியர்களின் செயற்றிறனினை அதிகரிப்பதற்கு தொழில் திருப்தி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன அதிகரிக்கச் செய்யப்பட வேண்டுமென சிபார்சு செய்யப்படுகின்றது.
பிரதான சொற்பதங்கள் தொழில் திருப்தி, நிறுவனப் பிரஜை நடத்தை, ஊழியர் செயற்றிறன்