Abstract:
[22:00, 1/30/2024] Fathima Nitha: ஊழியர்களின் தொழில் திருப்தி மற்றும் நிறுவனப் பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களது செயற்றிறனில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பாக பல ஆய்வாளர்களால் பல்வேறு நாடுகளில் பல்வேறுபட்ட துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. )Yuen et al, 2018 in Eeman, 2016(. لنومè amú Úg Ga வெளிக்கள உத்தியோகத்தர்களின் தொழில் திருப்தி மற்றும் நிறுவன பிரஜை நடத்தை ஆகியன ஊழியர்களின் செயற்றிறனில் ஏற்படுத்தும் தாக்கத்தினை அறிந்து கொள்வதற்காக அங்கு கடமையாற்றும் 100 வெளிக்கள உத்தியோகத்தர்கள் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் வினாக்கொத்து மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களினை SPSS 22.0 மென்பொதியினைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விபரிப்புப் புள்ளிவிபரவியல் ஆய்வில் தொழில் திருப்தி, நிறுவன பிரஜை நடத்தை மற்றும் ஊழியர் செயற்றிறன் என்பன உயர் மட்டத்தில் காணப்படுவதாக அடை…
[23:51, 1/30/2024] Fathima Nitha: ஆய்வுச் சுருக்கம்
கடந்த காலங்களில் பல்கலைக்கழக பட்டதாரிகள் பல துறைகளில் தமது ஆற்றலினை வெளிப்படுத்தி அதன் மூலம் பாரிய மாற்றத்தினை நாட்டிற்கும் சமூகத்திற்கும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இலங்கையில் கல்வி கற்ற பட்டதாரிகள் கடந்த சில வருடங்களாக அரச துறை வேலைவாய்பில் அதிக நாட்டம் செலுத்தி வருகின்றனர். மேலும் அரச வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதற்காக இவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு போராட்டங்கள் மூலம் மற்றும் பல நடவடிக்கைகளின் ஊடாக அரசிற்கு அழுத்தங்களினை மேற்கொள்கின்றனர். எனவே இங்கு தனியார் துறை வேலைவாய்ப்பு மீது பட்டதாரி மாணவர்களின் மனப்பாங்கு தொடர்பில் ஆராய வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட கிழக்குப்பல்கலைக்கழக தனியார் துறையில் பணிபுரியும் பட்டதாரி மாணவர்களின் தனியார்துறை மீதான மனப்பாங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பதனைக் கண்டறிதல் என்னும் ஆய்வினை முன்னெடுக்கும் வகையில் இங்கு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2017 தொடக்கம் 2019ஆம் ஆண்டில கற்றல் நடவடிக்கைகளினை பூர்த்தி செய்து, வணிகப் பிரிவின் கீழ் பட்டங்களைப் பெற்றுக்கொண்ட 618 பட்டதாரிகள் மத்தியில் இருந்து குறித்த ஆய்விற்காக 100 தனியார் துறையில் பணிபுரியும் பட்டதாரிகள் எழுமாற்றாக தெரிவு செய்து, அவர்களிடம் ஆய்வு மாறிகளான தொழில் திருப்தி, தொழில் உள்ளடக்கம். தொழில் கலாச்சாரம், தொழில் கொடுப்பனவும் ஊக்குவிப்பும், தொழில் மேற்பார்வை மற்றும் தொழில் வசதிகள் என்பவை ஆராயப்பட்டன.
அதன்படி பெற்றுக்கொண்ட முடிவுகளாகளினை நோக்குகையில் அவை தொழில் திருப்தி (3.05), தொழில் உள்ளடக்கம் (2.91), தொழில் கலாச்சாரம் (2.77), தொழில் கொடுப்பனவும் ஊக்குவிப்பும் (3.04), தொழில் மேற்பார்வை (2.94) மற்றும் தொழில் வசதிகள் (2.87) ஆகக் காணப்படுகின்றன. எனவே தீர்மான எல்லையினை அடிப்படையாகக் கொண்டு இங்கு மட்டக்களப்பு மாவட்ட கிழக்குப்பல்கலைக்கழக தனியார் துறையில் பணிபுரியும் பட்டதாரி மாணவர்களிடம் மாறிகள் மீதான மனப்பாங்கு நடுத்தர நிலையில் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட கிழக்குப்பல்கலைக்கழக தனியார் துறையில் பணிபுரியும் பட்டதாரி மாணவர்களின் தனியார்துறை மீதான மனப்பாங்கு நடுத்தர நிலையில் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதனை மாற்றியமைப்பதற்கு போதுமான சிபாரிசுகளும் இங்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது