Abstract:
பொது மக்களுக்கான அரசின் பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்ற நிறுவனங்களுள் முதன்மையானதாக பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. தனியார் துறையினரைப் போன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை அரச நிறுவனங்கள் தமது சேவை வழங்கலில் கொண்டிருப்பதில்லை என்ற பரவலான குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தேசிய உற்பத்தித் திறன் செயலகங்கள் தாபிக்கப்பட்டு அதனூடாக ஆண்டு தோறும் அரச நிறுவனங்களுக்கான உற்பத்தி திறன் விருதுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டு நிறுவனங்களைப் பாராட்டி அரச சேவையினை வினைத்திறனாக முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதற்காக அரச நிறுவனங்கள் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றி வரும் ஜப்பானிய 58 முறைமையினை அமுல்படுத்தி வருகின்றன
எந்தவொரு மாற்றத்தினையும் அமுல்படுத்துவதற்கு ஊழியர்களின் பங்குபற்றுதலானது இன்றியமையாததாகும். இதன்பொருட்டு ஊழியர்களின் மனப்பாங்கினை கண்டறிய வேண்டியது அவசியமாகும். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு. ஏறாவூர் பற்று மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகங்களை அடிப்படையாகக் கொண்டு ஐப்பானிய 5S முறைமையினை அமுல்படுத்துவது தொடர்பான ஊழியர்களின் மனப்பாங்கினை கண்டறியும் பொருட்டு இவ்வாய்வானது முன்னெடுக்கப்பட்டுள்ளது. I
58 முறைமையினை அமுல்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளான நிறுவன தலைமைத்துவத்தின் பங்களிப்பும் ஆதரவும், உத்தியோகத்தர்களுடனான தொடர்பாடல், பயிற்சி. மற்றும் உகந்ததொரு நிறுவன சூழல் காணப்படும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்களின் மனப்பாங்கினை கண்டறிவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை வடக்கு, ஏறாவூர் பற்று மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் 147 உத்தியோகத்தர்கள் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டு இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. உத்தியோகத்தரிடையே போதியளவு அறிவினையூட்டி, சிறந்த பாராட்டுக்களையும் அங்கீகாரத்தினையும் வழங்குவதன் மூலம் 5S முறைமையினை அமுல்படுத்துவதற்கான நேரான் மனப்பாங்கினை அவர்களிடையே தேற்றுவிக்கமுடியும் என கண்டறியப்பட்டது