dc.description.abstract |
மீளக்குடியேற்ற அபிவிருத்தித் திட்டங்களில் அரசாங்கமும், பல அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்கொண்டு வரும் நிலையில், Utcda ஸ்தாபனமும் பலதரப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மட்டக்களப்பு தென்மேற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அப்பிரதேசங்களில் செயற்திட்டங்களை மேற்கொள்ளும் Utcda வின் பங்களிப்பினையும் அதனை மேலும் விருத்தி செய்வதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
A
Utcda ஸ்தாபனத்தின் பயனாளிகள் 100 பேர் மாதிரியாக கொள்ளப்பட்டு அவர்களிடையே வழங்கப்பட்ட வினாகொத்தின் மூலம் கல்வி, சுகாதாரம். பொருளாதாரம். சுயதொழில் தொடர்பான செயற்பாடுகளின் திருப்தி நிலையினை SPSS மென்பொருளில் மூலம் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு முடிவுகளாக கல்வி, பொருளாதாரம், மற்றும் சுகாதாரம் தொடர்பாக பயனாளிகளின் திருப்தியடைந்துள்ளதுடன் இம் முடிவுகளிற்கு ஏற்ப Utcda ஸ்தாபனத்தின் மேலும் முன்னேற்றமான செயற்பாடுகளை மேற்கொள்ள சிபாரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது |
en_US |