Abstract:
முகாமைத்துவ கற்கை நெறியினுள் உள்ளடங்குகின்ற இவ் ஆய்வானது இலங்கையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் செயற்றிறன் மிகவும் குறைவாகக் காணப்படுவதாக பல ஆய்வாளர்களினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எனினும் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்றிறன் குறைவிற்கான காரணிகள் தொடர்பாக முன்னைய ஆய்வாளர்களிடையே பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனவே மட்டக்களப்பிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் செயற்றிறன் குறைவிற்கான காரணிகளை அறிந்து கொள்வது இவ் ஆய்வின் நோக்கமாகும். இதற்கென மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 120 கூட்டுறவாளர்களினை ஆய்வுப் பரப்பாகக் கொண்டு நேரடி வினாக்கொத்து மூலம் பெறப்பட்ட தரவுகளினை SPSS 22.0 இன் மூலம் பகுப்பாய்வு செய்து விபரிப்பு புள்ளிவிபரம் (Descriptive Statistics) மூலம் விளக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வின் பெறுபேறுகளின்படி மட்டக்களப்பிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் செயற்றிறன் குறைவிற்கான கரணிகளான அங்கத்தவர் பலவீனம். நிதிப் பற்றாக்குறை. நிர்வாகத் திறமையின்மை, சந்தைப் போட்டி, புறச் சூழந்த்தாக்கம், குறைவான ஊழியர் பயிற்சி மற்றும் குறைவான ஊக்குவிப்பு ஆகியவை என இவ் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட காரணிகள் மீது கூட்டுறவு நிறுவனம் கவனம் செலுத்தப்பட வேண்டுமென சிபாரிசு செய்யப்படுகின்றது. மேலும் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்றிறனினை அதிகரிப்பதற்கு இவ் ஆய்வின் மூலம் முன்வைக்கப்பட்ட தந்திரோபாயங்களான அங்கத்தவர் பலத்தினை அதிகரித்தல். நிதிப் பலத்தினை அதிகரித்தல், நிர்வாகத் திறமையினை அதிகரித்தல். தொழில்சார் நிபுனத்துவத்தினை அதிகரித்தல், ஊழியர் பயிற்சிகளை அதிகரித்தல் மற்றும் ஊழியர்களுக்கான ஊக்குவிப்புக்களினை அதிகரித்தல் ஆகியவை முன்வைக்கப்பட்டுள்ளன