dc.description.abstract |
மனிதனிடத்தே உண்மையாகவோ கற்பனையாகவோ உடல் ரீதியாக அல்லது மனரீதியாகவோ ஏற்படுகின்ற தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர் செயலை செய்ய முடியாத நிலையில் ஏற்படுகின்ற பின் விளைவுகள் மன அழுத்தமாகும். நிறுவனங்களின் வெற்றிக்கு ஊழியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக காணப்படுகிறது. எனவே ஊழியர்கள் சிறந்த முறையில் தமது பணியை செய்வதற்கு எதுவித தடைகளும் இருக்கக் கூடாது அவ்வாறு தடைகள் காணப்பட்டால் தொழில் துறையில் வெற்றிகள் காண்பது குறைவாகவே இருக்கும். அந்தவகையில் மட்டக்களப்பு நகரில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் தொழில் புரியும் ஊழியர்களின் மன அழுத்தமும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதாக இவ்வாய்வு காணப்படுகிறது. I
இவ்வாய்வுக்குரிய மாதிரியாக அரச மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து பணிபுரிகின்ற 100 ஊழியர்களை உள்ளடக்கியுள்ளது. மனஅழுத்தமானது நிறுவன ரீதியாககவும் தனிப்பட்டரீதியாகவும் அமைந்துள்ளது. இதில் நிறுவன ரீதியானதில் நிதிசார் நடவடிக்கைகள், வேலையின் தன்மை, வேலைச்சூழல், வேலைப்பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை என்பனவும் தனிப்பட்ட ரீதியில் குடும்பப் பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினை மற்றும் ஆளுமை என்பன உள்ளடங்கின்றது. ஆளுமையினை தீர்மானிக்கும் ஒவ்வொரு பரிமானத்தின் இடைப்பெறுமதியினையும், நியம விலகலும் கணிக்கப்பட்டு குறிகாட்டிகளின் இடைப்பெறுமானத்தினை ஒப்பீடு செய்வதன் மூலம் அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்களின் மன அழுத்தமானது பகுப்பாய்வு செய்யப்பட்டு புள்ளிவிபரங்களுடன் ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் மன அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புக்களை முழுமையாக பகுப்பாய்வு செய்யும் போது நடுத்தர மட்டத்தில் காணப்படுகின்றது. மனஅழுத்தங்களுக்கான காரணங்களை இனங்கண்டு நிவர்த்தி செய்வதற்கான விதந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி ஊழியர்கள் மன திருப்தியுடன் வேலை செய்ய கூடியதாக உள்ளது. சிறந்த வங்கிச் சேவையினை பெற்றுக் கொள்வதற்கு இவ்வாய்வு ஓர் வழிகாட்டியாக அமையும். |
en_US |